வைகாசி விசாகத்தை ஒட்டி மதுரையில் இருந்து பழநி-க்கு சிறப்பு ரயில்: மதுரை கோட்ட ரயில்வே ஏற்பாடு | Special Trains to Palani from Madurai for Vaikasi Visakam


மதுரை: வைகாசி விசாகத்தை ஒட்டி வரும் 12-ம் தேதி, பயணிகளின் வசதிக்காக மதுரையில் இருந்து பழநிக்கு சிறப்பு முன்பதிவில்லா விரைவு ரயில் இயக்கப்படும் என்று மதுரை கோட்ட ரயில்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பழநியில் ஜூன் 12-ம் தேதி வைகாசி விசாக திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி பயணிகள் வசதிக்காக மதுரை – பழனி ரயில் நிலையங்களுக்கு இடையே சிறப்பு ரயில் ஒன்று இயக்க ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி மதுரை – பழனி முன்பதி வில்லாத விரைவு சிறப்பு ரயில் மதுரையிலிருந்து காலை 10.50 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.25 மணிக்கு பழனி சென்று சேரும்.

மறுமார்க்கத்தில் பழனி – மதுரை முன்பதிவில்லாத விரைவு சிறப்பு ரயில் பழனியில் இருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு மாலை 5.10 மணிக்கு மதுரை வந்து சேரும். இந்த சிறப்பு ரயில்கள் சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களில் 10 இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் மற்றும் 2 இரண்டாம் வகுப்பு பொது மற்றும் சரக்கு பெட்டிகள் இணைக்கப்படும். இந்த ரயில்கள் ஜூன் 12-ம் தேதி ஒரு நாள் மட்டும் இயக்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube