கேப்டனாக முதல் ஐபிஎல் தொடரிலேயே அதுவும் ஐபிஎல் தொடருக்கு அறிமுகமான அணியை சாம்பியனாக்கிய வகையில் ஏகப்பட்ட சிக்கல்கள், விமர்சனங்கள் உள்ளன இந்நிலையில் தோனி கிட்டத்தட்ட ரிட்டையர் ஆகும் ஸ்டேஜுக்கு வந்துவிட்டதால் வணிகங்களுக்கு இன்னொரு பிம்பம் தேவை, அந்தத் தேவைக்கு தகுந்தாற்போல் வீரர்களும் சேர்ந்து லாவணி பாடுவார்கள், அந்த வகையில் தனக்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்புக் கொடுக்காத சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு அடுத்தபடியாக வாய்ப்பு கொடுத்த ஹர்திக் பாண்டியா ஒரு ஜூனியர் தோனி என்று வர்ணித்துள்ளார் சிஎஸ்கே முன்னாள் வீரரும் தமிழக வீரருமான சாய் கிஷோர்.
பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு சாய் கிஷோர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
தோனிக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளன. தோனியைப் போலவே ஹர்திக் பாண்டியாவும் வீரர்களிடமிருந்து சிறந்தவற்றைப் பெறுவதில் சிறந்தவராக இருக்கிறார். இருவருமே தன்னை விட அணியை முன்னிலைப் படுத்துபவர்கள்.
இதைத்தான் நாம் ஒரு தலைவரிடமிருந்து எதிர்பார்க்கிறோம். இந்தக் காரணங்களினால் ஹர்திக் பாண்டியா ஒரு ஜூனியர் தோனி என்கிறேன். என்றார் சாய் கிஷோர்.
டாடா ஐபிஎல் 2022-ல் சாய் கிஷோர் இறுதிப் போட்டி உட்பட 5 போட்டிகளில் ஆடி 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். விராட் கோலியே இவரை மரியாதை கொடுத்து ஆடினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.