திருச்சிற்றம்பலத்தில் தனுஷ் கதாபாத்திரத்தை சன் பிக்சர்ஸ் வெளிப்படுத்தியது – தமிழ் செய்திகள்


தனுஷ் நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகளின் கேரக்டர் குறித்த அறிவிப்பை கடந்த இரண்டு நாட்களாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு வருவதை பார்த்து வருகிறோம்.

முதல் கட்டமாக ராஷிகண்ணா அனுஷா என்ற கேரக்டரில் நடிப்பதாகவும் அவர் தனுஷின் பள்ளி தோழியாக நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து கிராமத்து தென்றல் ரஞ்சனி என்ற கேரக்டரில் பிரியா பவானி சங்கர், சீனியர் திருச்சிற்றம்பலம் கேரக்டரில் இயக்குனர் இமயம் பாரதிராஜா, இன்ஸ்பெக்டர் நீலகண்டன் கேரக்டரில் பிரகாஷ்ராஜ், தனுஷின் தோழி ஷோபனா என்ற கேரக்டரில் நித்யா மேனன் ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

dhanush next 110662022m1

இதனை அடுத்து தனுஷின் கேரக்டர் எப்போது வெளிவரும் என்ற ஏக்கத்தில் ரசிகர்கள் இருந்த நிலையில் சற்று முன் ‘திருச்சிற்றம்பலம்’ கேரக்டரில் தான் தனுஷ் நடித்து வருகிறார் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதுகுறித்த வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாக வருகிறது.

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படம் ஜூலை 1ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக தெரிகிறது.





Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube