சன்னி லியோன்: தள்ளிவிட்ட நண்பனை செருப்பால் அடித்த சன்னி லியோன்: தீயாய் பரவும் வீடியோ.! – நடிகை சன்னி லியோன் இன்ஸ்டாகிராம் வீடியோ வைரலானது


பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமாக இருப்பவர் சன்னி லியோன். இவர் தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். தற்போது தமிழ், இந்தி, கன்னட மொழிகளில் தயாராகும் வீரமாதேவி என்ற சரித்திர படத்தில் நடித்து வருகிறார். மேலும் பேய்ப்படம் ஒன்றில் காமெடி நடிகர் சதீஷுடன் இணைந்து நடித்து வருகிறார்.

ஓ மை கோஸ்ட் என்ற தமிழ் படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார் சன்னி லியோன். சதீஷ் மற்றும் தர்ஷா குப்தா நாயகன், நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் சன்னி லியோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது.

உண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

யுவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜாவித் ரியாஸ் இசையமைத்துள்ளார். தீபக் மேனன் ஒளிப்பதிவில் அருண் சித்தார்த் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் இந்த படம் ரிலீசாக உள்ளது.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சன்னி லியோன், அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற சன்னி லியோன் பிகினி உடையில் கவர்ச்சியாக எடுத்துக்கொண்டு புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு உயிரிழந்தார்.

நெல்சன் மேல ஏன் இவ்வளவு வன்மம்.?: ப்ளூ சட்டை மாறனை விளாசும் நெட்டிசன்கள்.!
இந்நிலையில், சன்னி லியோன் பதிவிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நீச்சல் குளம் அருகில் நடந்து வரும் சன்னி லியோனை அவருடைய நண்பர் நீரில் தள்ளி விடுகிறார். உடனே சன்னி லியோன் தன்னை தள்ளிவிட்டு நண்பர் செருப்பை தூக்கி எறிந்து அடிக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.



Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube