சிபிராஜ் தன்யா ரவிச்சந்திரனின் மாயூன் படக்குழுவின் சூப்பர் புரமோஷன் – தமிழ் செய்திகள்


தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத புதுமையான முயற்சியாக ‘மாயோன்’ படத்தின் புரமோஷன் ஆனது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

சிபிராஜ் நடித்த ‘மாயோன்’ திரைப்படம் ஜூன் 16ஆம் தேதி வெளியாகும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கிஷோர் இந்த படத்தை இயக்கியுள்ளார் என்பதும், இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்திற்காக புதுமையான முறையில் புரமோஷன் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்த படத்தின் ரத்தம் ஒன்று முக்கிய கேரக்டராக வருவதை அடுத்து அதே போன்ற ரத்தத்தை உருவாக்கி அதை தமிழகம் முழுவதும் வலம் வர திட்டமிட்டுள்ளனர். 26 நாட்கள் இந்த ரதம் தமிழகம் முழுவதும் சுற்றி வரும் என்றும் படக்குழுவினர் பதிவு.

maayon080622 2

மேலும் இந்த படத்திற்காக குகை போன்ற இடத்தில் கோவில் ஒன்றை அமைத்து உள்ளதாகவும் இந்த படத்தின் கலை இயக்குனரின் பணி பிரமிக்க வைக்கும் வகையில் இருக்கும் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

மேலும் இந்த படம் ஹாலிவுட்டில் வெளியான ‘டாவின்சி கோட்’ ‘இந்தியானா ஜோன்ஸ்’ போன்ற மர்ம படமாக இருக்கும் என்றும் சினிமா ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும் என்றும் படக்குழுவினர்.





Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube