பாலியல் தொழில் சட்டத்துக்கு புறம்பானது அல்ல என்ற மிகவும் முக்கியமான ஒரு தீர்ப்பை இந்தியாவின் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பு பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் அவர்களும் சாதாரண மக்களைப் போல இயல்பான வாழ்க்கையை வாழ்வதற்கும் மிகப்பெரிய கருவியாக இருக்கும்.
இந்தியாவில் உள்ள பல்வேறு இடங்களிலும் பாலியல் தொழிலாளர்கள் பல இன்னல்களை சந்திக்கிறார்கள். யுனைட்டெட் நேஷன்ஸ் இன் கணக்கெடுப்புப்படி 2009 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் சுமார் 4 கோடி நபர்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இதில், பாலியல் தொழிலில் ஈடுபடும் ஆட்களை சேகரிக்கும் ஏஜென்ட்டுகள் மற்றும் பாலியல் ரீதியான உள்ளடக்கங்களை எழுதுபவர்கள் ஆகியோர் அடங்குவர்.
பாலியல் தொழிலாளர்களுக்கு அங்கீகாரம் வேண்டும் என்ற ஒரு சிறிய இயக்கம் முதல் முறையாக 1975 ஆம் ஆண்டு லியோனில் தொடங்கியது. கிட்டத்தட்ட 100 பாலியல் தொழிலாளர்கள் செயின்ட் நிசியர் சர்ச்சில் ஒன்று கூடினார்கள். பாலியல் தொழிலாளர்கள் மீது போலீசாரின்அடக்கு முறையை எதிர்த்து போராட்டம் நடத்தினர் மற்றும் தாங்களும் மற்றவர்களைப் போல இயல்பாக நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இந்த பெண்களின் போராட்டம் பல இடங்களிலும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பாலியல் தொழிலாளர்கள் மீது அடக்குமுறை அதிகரித்துள்ளது. ஆனால், அதே நேரத்தில், பல நாடுகளிலும் உள்ள சர்ச்சைகளில் பாலியல் தொழிலாளர்கள் இதே போன்ற போராட்டம் நடத்தப்பட்டது.
மேலும் படிக்க: பாலியல் தொழிலாளர்களுக்கான சம உரிமையையும், பாதுகாப்பையும் உறுதி செய்வது யார்..?
பாலியல் தொழிலாளர்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைத்தபோதும் போலீசாரால் அவர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர் மற்றும் இவர்களை பாதுகாக்க எந்த சட்டமும் உருவாக்கப்படவில்லை.
பாலியல் தொழிலாளர்கள் தாங்களும் சாதாரணமாக வாழ்வதற்கு உரிமையும் அங்கீகாரமும் வேண்டும் என்ற போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளனர். எனவே இதை வலியுறுத்தும் பாலியல் தொழிலாளர்கள் தினம் என்று அறிவிக்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பலவிதங்களில் முயற்சி செய்யப்படுகிறது.
இத்தகைய தினங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு தீம் அறிவிக்கப்படும். ஆனால் சர்வதேச பாலியல் தொழிலாளர்கள் தினத்தை பொறுத்தவரை எல்லா ஆண்டுகளுமே இவர்கள் ஒரே நோக்கத்தில் நடித்துள்ளனர்.
பாலியல் தொழிலாளர்களுக்கும் நீதி வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. பாலியல் தொழிலாளர்கள் மீது தவறில்லை என்றாலும், இவர்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் குற்றவாளிகள் ஆக்கப்படுகிறார்கள்.
சமீபத்தில் பாலியல் தொழிலாளர்களின் உரிமை மற்றும் அவர்களின் வாழ்க்கையை பாதுகாக்கும் உச்ச நீதிமன்றம் பாலியல் தொழிலை ஒரு சட்டபூர்வ தொழிலாக அங்கீகரித்துள்ளது. சட்டத்துக்கு புறம்பான ஒரு வேலையாக இருந்தாலும் இந்தியாவைப் பொறுத்தவரை பாலியல் தொழிலாளிகள் அனைவரும் கீழான கண்ணோட்டத்தில் தான் பார்க்கப்படுகிறார்கள். மற்ற நபர்களை போல இயல்பான வாழ்க்கையை வாழ முடிவதில்லை. அது மட்டுமின்றி அவர்கள் வாழ்வதற்கு நிரந்தரமான இடமில்லை, முகவரி கிடையாது, ஆதார் மற்றும் பான் என்ற தனிப்பட்ட அடையாளத்தை வெளிப்படுத்தும் எந்த ஒரு வசதியும் இல்லை. மேலும் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, வங்கிக் கணக்கு என்று எல்லாமே மறுக்கப்பட்டு வருகிறது.
இதேபோன்ற பாலியல் தொழிலாளர்கள் இந்தியாவில் பல இடங்களில் மன ரீதியாக உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தொடர்ந்து பாலியல் தொழிலாளர்களும் சாதாரண மக்கள் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டு அவர்களுக்குரிய அடிப்படை உரிமைகளையும் முதலில் பெறுவதை உறுதிசெய்யவேண்டும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.