இந்நிலையில் விக்ரம் படம் நேற்று வெளியாகி திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் 34 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது விக்ரம் திரைப்படம். வார இறுதி நாட்களில் இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தில் கமலுக்கு நிகராக விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாஸில், நரேன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக கவுரவ தோற்றத்தில் நடித்துள்ள சூர்யாவின் நடிப்பும் பாராட்டைப் பெற்று வருகிறது. ரோலக்ஸ் என்ற கதாப்பாத்திரத்தில் சூர்யா மிரட்டியுள்ளார்.
இதனால் விக்ரம் படத்தை கமல் ரசிகர்களை தாண்டி விஜய் சேதுபதி ரசிகர்களும் சூர்யாவின் ரசிகர்களும் போட்டி போட்டு கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ரோலக்ஸ் கதாப்பாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து பூரித்து போயுள்ளார் நடிகர் சூர்யா.
அவர் பதிவிட்ட டிவிட்டில், டியரஸ்ட் கமல் அண்ணா எப்படி சொல்றது…!?உங்களுடன் திரையில் வரவேண்டும் என்ற கனவு நனவாகியுள்ளது.இதைச் செய்ததற்கு நன்றி இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அத்தனை அன்பையும் கண்டு பூரித்து போகிறேன் என பதிவிட்டுள்ளார். மேலும் #Rolex #Vikram என்ற ஹேஷ்டேக்கையும் குறிப்பிட்டுள்ளார் நடிகர் சூர்யா.