சூர்யா 41 படத்தின் தலைப்பு தகவல் bala gv prakash 2d entertainment – தமிழ் செய்திகள்


தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சூர்யா 41’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி அருகே முடிந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெறுவதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்குவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் ‘சூர்யா 41’ படத்தின் டைட்டில் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. இந்த படத்திற்காக இரண்டு டைட்டில்களை படக்குழுவினர் செய்து வைத்திருப்பதாகவும், அவற்றில் ஒன்றை தேர்வு செய்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த டைட்டில்கள் ‘வணங்கான்’ மற்றும் ‘கடலாடி’ என்று கூறப்படுகிறது.

இந்த படம் மீனவர்கள் பிரச்சினை குறித்து அலசும் படம் என்றும் இந்த படத்தில் சூர்யா இரண்டு வேடங்களில் நடித்து வருவதாகவும் அதில் ஒரு கேரக்டர் மாற்றுத்திறனாளி கேரக்டர் என்றும் கூறினார். சூர்யா ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வரும் இந்த படம் ஜிவி பிரகாஷ் இசையில், பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில் தயாராகி வருகிறார். ‘சூர்யா 41’ திரைப்படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

suriya010622 1

இந்த நிலையில் ‘சூர்யா 41’ படத்தை முடித்துவிட்டு சூர்யா அடுத்ததாக ‘ஜெய்பீம்’ இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஒரு படமும், சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படமும், வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ படத்திலும் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கும் திரைப்படத்திலும் சூர்யா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube