சூர்யா மற்றும் கார்த்தி பட நாயகிக்கு பெண் குழந்தை பாக்கியம் – தமிழ் செய்திகள்


சூர்யா, கார்த்தி படங்களில் நடித்த நடிகை சமீபத்தில் கர்ப்பமாக இருந்த நிலையில் நேற்று அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையின் புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த நிலையில் அந்த குழந்தைக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

சூர்யா நடித்த ‘மாசு என்ற மாசிலாமணி’ கார்த்தி நடித்த ‘சகுனி’ உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்தவர் நடிகை பிரணிதா சுபாஷ். இவர் கடந்த ஆண்டு மே மாதம் பிரஜித் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் தனது கணவரின் 34வது பிறந்தநாளின் போது தான் கர்ப்பமாக இருப்பதாக ரசிகர்களுக்கு அறிவித்தார் என்றும் ஏற்கனவே பார்த்தோம்.

pranitha11062022m1

அது மட்டுமின்றி கர்ப்பமாக இருக்கும் போது அவர் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வளைகாப்பு விழாவில் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த நிலையில் அவை மிகப் பெரிய அளவில் வைரலானது.

இந்த நிலையில் தற்போது பிரணிதாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அடுத்து அவர் அந்த குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து, தனக்கு பிரசவம் பார்த்த மருத்துவமனை டாக்டர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

pranitha11062022m2

‘நான் உண்மையிலேயே ஒரு அதிர்ஷ்டசாலி! மகப்பேறு மருத்துவர் டாக்டர் ஜெயஸ்ரீ அவர்கள் எனக்கு கடினமான நேரங்களாக இருந்தாலும் அதிர்ஷ்டவசமாக அவரது குழுவில் டாக்டர் சுனில் ஆகியவர்களின் உதவியுடன் எனக்கு சீராக பிரசவம் பார்த்தார். முடிந்தவரை என்னுடைய பிரசவ வலியை குறைத்த டாக்டர் சுபா மற்றும் மயக்க மருந்து நிபுணர் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் அனைவருக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரணிதா தெரிவித்துள்ளார்.

என்னுடைய குழந்தையின் முகத்தை உங்களிடம் காட்டுவதற்கு மிகவும் விருப்பமாக இருக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் அவர் மருத்துவமனையில் இருக்கும் போது எடுத்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்ட நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube