நெஞ்சுவலி
கடந்த சில நாட்களுக்கு முன்பு நெஞ்சு வலி காரணமாக பாதிக்கப்பட்டார். இதையடுத்து சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். டி ராஜேந்தருக்கு வயிற்றில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது.
பாடகர் கேகே: உங்களை எப்போதும் நேசித்துக் கொண்டே இருப்பேன் அப்பா… கலங்கி நிற்கும் கேகேவின் மகள்!
வயிற்றில் ரத்தக்கசிவு

டி ராஜேந்தர் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்ட சிம்பு டி ராஜேந்தருக்கு வயிற்றில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், மேல் சிகிச்சைக்காக டி ராஜேந்தரை வெளிநாடு அழைத்து செல்ல உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் இதுவரை டி ராஜேந்தரை வெளிநாட்டிற்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லவில்லை.
விக்ரம்: இது ஒன்னுதாங்க மைனஸ்… மத்தப்படி ‘விக்ரம்’ வேற லெவல்!
முதல்வர் சந்திப்பு

மேலும் மருத்துவமனை நிர்வாகமும் டி ராஜேந்தருக்கு என்ன பிரச்சனை என்பது குறித்து இதுவரை அறிக்கை வெளியிடவில்லை. இதனிடையே முதல்வர் முக ஸ்டாலின் டி ராஜேந்தரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதேபால் சினிமா பிரபலங்கள் சிலரும் டி ராஜேந்தரை சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
இன்னும் 2 நாட்களில்

இதனால், அமெரிக்கா செல்லும் திட்டமும் தள்ளிப்போனது. இந்நிலையில், டி.ராஜேந்திரருக்கு தற்போது விசாரணை கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இன்று இரண்டு நாட்களில் டி ராஜேந்தர் மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லப்படலாம் என கூறப்படுகிறது.
ஏன் தாமதம்?

இந்நிலையில் டி ராஜேந்தரை மேல் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்வதில் ஏன் தாமதம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல திட்டமிடப்பட்ட நிலையில் விசா கிடைப்பதில் தாமதம் ஆனதாக தெரிகிறது.