ஹோண்டாமோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் தவிர்க்க முடியாத தரமான தயாரிப்புகளை விற்பனை செய்து வரும் ஒரு நிறுவனம் இந்நிறுவனத்தின் கடந்த மே மாத விற்பனை ரிப்போர்ட் தற்போது வெளியாகியுள்ளது. மற்ற நிறுவனங்களைப் போல ஹோண்டா நிறுவனமும் விற்பனையில் வளர்ச்சியைப் பெற்றுள்ளது. அறுவடைக் காலம், மற்றும் சாதகமான மழை ஆகியவை இந்தாண்டு நல்ல விளைச்சலை வழங்கியுள்ளதால் இந்தியாவில் மக்கள் மத்தியில் வாங்கும் திறன் அதிகமாகியுள்ளது.

ஹோண்டா நிறுவனம் கடந்த மே மாதம் உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி சேர்த்து மொத்தம் 3,53,188 வானகங்களை விற்பனை செய்துள்ளனர். இதுவே கடந்தாண்டு மே மாதம் வெறும் 38,763 வாகனங்கள் விற்பனை அதிகமாகியிருந்தது ஒரே ஆண்டில் சுமார் 727.71 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது. ஏற்றுமதியிலும் இந்நிறுவனம் 66.68 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. கடந்தாண்டு மே மாதம் வெறும் 12,939 வாகனங்கள் மட்டுமே ஏற்றுமதியான நிலையில் தற்போது 32,344 வாகனங்கள் ஏற்றுமதியாகியுள்ளது.

இதுவே மே மாத விற்பனையைக் கடந்த ஏப்ரல் மாத விற்பனையுடன் ஒப்பிடும் போது 2.17 சதவீத விற்பனை சரிவைப் பெற்றுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 3,61,027 வாகனங்கள் விற்பனையாகியிருந்தன. தற்போது அதைவிட 7,819 வாகனங்கள் குறைவாகவே விற்பனையாகியுள்ளது. ஏப்ரல் மாத உள்நாட்டு விற்பனையை பொறுத்தவரையில் 0.66 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது ஏப்ரல் மாதத்தில் 3,18,732 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது.

ஏற்றுமதியில் தான் கடந்த மே மாதம் ஹோண்டா நிறுவனம் மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளது. கிட்டத்தட்ட ஒரே மாதத்தில் 23.53 சதவீத விற்பனை சரிவை அந்நிறுவனம் பெற்றுள்ளது. ஏப்ரல் மாதம் மொத்தம் 42,295 வாகனங்கள் ஏற்றுமதியாகியிருந்தது. அது தான் மிகப்பெரிய சரிவாக ஹோண்டா நிறுவனத்திற்கு அமைந்துவிட்டது.

Honda | May-22 | May-21 | Difference | Growth (%) YoY |
Domestic | 3,20,844 | 38,763 | 2,82,081 | 727.71 |
Exports | 32,344 | 19,405 | 12,939 | 66.68 |
Total | 3,53,188 | 58,168 | 2,95,020 | 507.19 |
Honda | May-22 | Apr-22 | Difference | Growth (%) MoM |
Domestic | 3,20,844 | 3,18,732 | 2,112 | 0.66 |
Exports | 32,344 | 42,295 | -9,951 | -23.53 |
Total | 3,53,188 | 3,61,027 | -7,839 | -2.17 |

வாகன தயாரிப்பைப் பொருத்தவரை இதுவரை ஹோண்டா நிறுவனம் எந்த விதமான எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பையும் வெளியிடவில்லை போட்டி நிறுவனங்களான ஹீரோ, டிவிஎஸ், போன்ற நிறுவனங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை களம் இறக்கத் தயாராகிவிட்டனர். ஆனால் ஹோண்டா ஃபிளக்ஸி ஃபியூயல் தொழிற்நுட்பத்தில் இன்ஜின்களை தயாரிப்பதில் மும்முரமாக உள்ளது. ஒரு ஓரத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பையும் ஆய்வு செய்து வருகிறது.

டூவீலரில் இந்தியாவில் டிவிஎஸ் நிறுவனம் ஏற்கனவே பிளக்ஸி ஃபியூயல் பைக்குகளை அறிமுகப்படுத்திய நிலையில் ஹோண்டா அறிமுகப்படுத்தினால் அது இரண்டாவது நிறுவனமாக இருக்கும் ஹோண்டா நிறுவனம் ஏற்கனவே CG150 TITAN MIX, NXR 150 Bros Mix, BIZ 125 Flex ஆகிய பைக்குகளை சர்வதேசச் சந்தையில் பிளக்ஸி ஃபியூயல் பைக்குகளாக விற்பனை செய்து வருகிறது. இது பிரேசில் நாட்டில் விற்பனையாகிறது. இந்தியாவில் இந்த பைக்குகள் விற்பனைக்கு இல்லை

ஹோண்டா நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் கோல்டு விங் டூர் பைக்கை அறிமுகப்படுத்தியது. முழுவதுமாக கட்டமைக்கப்பட்ட பைக்காக இந்தியாவிற்குள் இறக்குமதி செய்து இந்நிறுவனம் விற்பனை செய்கிறது. இந்த பைக் 1833 சிசி, 6 சிலிண்டர் இன்ஜின் 124.7 எச் பிவர், மற்றும் 170என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துவதாக உள்ளது. இந்த பைக் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் கியர் பாக்ஸ் உடன் விற்பனைக்கு ரெடியாக உள்ளது. இந்த பைக் ரூ39.20 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது.