கிட்டத்தட்ட சுமார் 1000% வளர்ச்சி உடன் டாடா டிகோர் கார்கள் விற்பனை!! வேகமா பிரபலமாகும் செடான்!

இந்தியாவில் செடான் கார்கள் விற்பனை கடந்த சில வருடங்களில் குறிப்பிடத்தக்க அளவில் சரிவை கண்டு வருகிறது. இதனாலேயே முன்பை போல் செடான் ரக உடலமைப்பை கொண்ட கார்களை சாலைகளில் காண முடிவதில்லை. தற்சமயம் பயன்படுத்தி வருபவர்களில் பலர் செகண்ட் ஹேண்டில் செடான் காரை வாங்கியவர்களாகவே விளங்குகின்றனர்.

கிட்டத்தட்ட சுமார் 1000% வளர்ச்சி உடன் டாடா டிகோர் கார்கள் விற்பனை!! வேகமா பிரபலமாகும் செடான்!

அதாவது, புதியதாக செடான் காரை வாங்குவோரின் எண்ணிக்கை மாதந்தோறும் கணிசமாக குறைந்து வருகிறது. தற்சமயம் இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் ஒரே செடான் மாடலாக மாருதி சுஸுகி டிசைர் விளங்குகிறது. கடந்த மாதத்தில் இந்த விலை-குறைவான மாருதி செடான் கார் மொத்தம் 11,603 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட சுமார் 1000% வளர்ச்சி உடன் டாடா டிகோர் கார்கள் விற்பனை!! வேகமா பிரபலமாகும் செடான்!

அதுவே 2021 மே மாதத்தில் வெறும் 5,819 டிசைர் கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் இந்த மாருதி செடான் மாடலின் விற்பனை கிட்டத்தட்ட 99% அதிகரித்துள்ளது. இவ்வாறு டிசைர் மட்டுமின்றி, கொரோனா 2வது அலை பரவலின் காரணமாக கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மே மாதத்தில் பெரும்பான்மையான செடான் கார்களின் விற்பனை குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியை கண்டுள்ளது.

கிட்டத்தட்ட சுமார் 1000% வளர்ச்சி உடன் டாடா டிகோர் கார்கள் விற்பனை!! வேகமா பிரபலமாகும் செடான்!

மாருதி சுஸுகி டிசைருக்கு அடுத்து இந்திய சந்தையில் அதிகளவில் விற்பனையாகும் செடான் காராக டாடா டிகோர் இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது. 2021 மே மாதத்தில் வெறும் 367 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்த டிகோர் செடான் கார்கள் கடந்த மே மாதத்தில் அதனை காட்டிலும் சுமார் 983% அதிகமாக 3,975 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன.

கிட்டத்தட்ட சுமார் 1000% வளர்ச்சி உடன் டாடா டிகோர் கார்கள் விற்பனை!! வேகமா பிரபலமாகும் செடான்!

இதேபோல் 3வது இடத்தில் உள்ள ஹோண்டா அமேஸின் விற்பனையும் சுமார் 676% வளர்ச்சியை கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் கண்டுள்ளது. ஏனெனில் கடந்த மே மாதத்தில் 3,709 யூனிட்கள் விற்கப்பட்டுள்ள அமேஸ் 2021 மே மாதத்தில் 478 யூனிட்கள் மட்டுமே விற்கப்பட்டு இருந்தது. இவற்றை தொடர்ந்து 4வது இடத்தில் ஹோண்டாவின் பிரீமியம் தர செடான் காரான சிட்டி உள்ளது.

கிட்டத்தட்ட சுமார் 1000% வளர்ச்சி உடன் டாடா டிகோர் கார்கள் விற்பனை!! வேகமா பிரபலமாகும் செடான்!

இப்போதும் இந்தியர்களின் விருப்பமான செடான் மாடலாக விளங்கும் சிட்டி கடந்த மாதத்தில் மொத்தம் 3,628 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதுவே கடந்த ஆண்டு மே மாதத்தில் 1,148 சிட்டி செடான் கார்கள் மட்டுமே விற்கப்பட்டு இருந்தன. இந்த வகையில் ஹோண்டாவின் பிரீமியம் செடான் காரின் விற்பனை 216% வளர்ச்சியை கண்டுள்ளது.

கிட்டத்தட்ட சுமார் 1000% வளர்ச்சி உடன் டாடா டிகோர் கார்கள் விற்பனை!! வேகமா பிரபலமாகும் செடான்!

ஹூண்டாய் அவ்ரா 3,311 யூனிட்கள் விற்பனை உடன் 5வது இடத்தை தனதாக்கியுள்ளது. 2021 மே மாதத்தில் அவ்ராவின் விற்பனை எண்ணிக்கை 1,637 ஆகும். இதன்படி பார்க்கும்போது, அவ்ராவின் விற்பனை கிட்டத்தட்ட 102% வளர்ச்சியை கண்டுள்ளது. சிஎன்ஜி தேர்விலும் விற்பனையாகும் அவ்ரா விரைவில் மேலும் ஒரு சிஎன்ஜி வேரியண்ட்டை பெறவுள்ளது.

கிட்டத்தட்ட சுமார் 1000% வளர்ச்சி உடன் டாடா டிகோர் கார்கள் விற்பனை!! வேகமா பிரபலமாகும் செடான்!

இதனால் அவ்ராவின் விற்பனை வரும் மாதங்களில் சற்று மேலும் அதிகரிக்கலாம். இவற்றிற்கு அடுத்து இந்த டாப்-10 லிஸ்ட்டில் 6வது இடத்தில் ஸ்கோடா ஸ்லாவியா உள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் உலகளவில் வெளியீடு செய்யப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஸ்லாவியா கடந்த மே மாதத்தில் 2,466 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட சுமார் 1000% வளர்ச்சி உடன் டாடா டிகோர் கார்கள் விற்பனை!! வேகமா பிரபலமாகும் செடான்!

ஹூண்டாயின் பிரீமியம் தர செடான் காராக விளங்கும் வெர்னா 1,488 யூனிட்கள் விற்பனை உடன் 7வது இடத்தை தொடர்ந்துள்ளது. இது 2021 மே மாதத்தில் விற்கப்பட்ட வெர்னா கார்களுடன் ஒப்பிடுகையில் 300 யூனிட்கள், அதாவது 26% மட்டுமே அதிகமாகும். இதற்கடுத்து உள்ள செடான் மாடல்கள் அனைத்தும் ஆயிரம் யூனிட்களுக்கும் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளவை ஆகும்.

கிட்டத்தட்ட சுமார் 1000% வளர்ச்சி உடன் டாடா டிகோர் கார்கள் விற்பனை!! வேகமா பிரபலமாகும் செடான்!

அதிகப்பட்சமாக மாருதி சுஸுகியின் விலைமிக்க செடான் மாடலாக விளங்கும் சியாஸ் 586 யூனிட்கள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதற்கடுத்து 9வது இடத்தில் ஸ்கோடா சூப்பர்ப் ப்ரீமியம் தர செடான் கார் 152 யூனிட்களின் விற்பனை உடனும், இந்த லிஸ்ட்டில் கடைசி 10வது இடத்தில் டொயோட்டாவின் ஹைப்ரிட் செடான் காரான காம்ரி 106 யூனிட்களின் விற்பனை உடனும் உள்ளன.

Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube