போட்டி நிறுவனங்களை மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த டாடா… இந்த விஷயத்தை கேக்கும்போதே பிரம்மிப்பா இருக்கு!

இந்தியாவில் நடப்பாண்டு மே மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 காம்பேக்ட் எஸ்யூவி கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், டாடா நெக்ஸான் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 6,439 நெக்ஸான் கார்களை டாடா நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு மே மாதம் 14,614 ஆக உயர்ந்துள்ளது. இது பிரம்மிக்க வைக்கும் விற்பனை எண்ணிக்கை என்பதில் சந்தேகமில்லை. அத்துடன் இது 127 சதவீத வளர்ச்சி என்பதும் குறிப்பிடத்தக்கது.

போட்டி நிறுவனங்களை மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த டாடா... இந்த விஷயத்தை கேக்கும்போதே பிரம்மிப்பா இருக்கு!

குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை வாங்கிய முதல் மேட் இன் இந்தியா கார் என்ற பெருமையை தன்வசம் வைத்திருப்பது, டாடா நெக்ஸான் காரின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. அத்துடன் டாடா நிறுவனம் நெக்ஸான் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை விற்பனை செய்து வருவதும், கூடுதல் பலம் சேர்க்கிறது.

போட்டி நிறுவனங்களை மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த டாடா... இந்த விஷயத்தை கேக்கும்போதே பிரம்மிப்பா இருக்கு!

இந்த பட்டியலில் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா 2வது இடம் பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் வெறும் 2,648 ஆக இருந்த இந்த காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு மே மாதம் 10,312 ஆக உயர்ந்துள்ளது. இது 289 சதவீத வளர்ச்சியாகும். மாருதி சுஸுகி நிறுவனம் வெகு விரைவில் விட்டாரா பிரெஸ்ஸா காரின் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

போட்டி நிறுவனங்களை மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த டாடா... இந்த விஷயத்தை கேக்கும்போதே பிரம்மிப்பா இருக்கு!

இந்த பட்டியலில் டாடா பன்ச் 3வது இடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டு மே மாதம் டாடா நிறுவனம் 10,241 பன்ச் கார்களை விற்பனை செய்துள்ளது. நூலிழையில் இரண்டாவது இடத்தை டாடா பன்ச் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவும் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கியுள்ள கார்தான்.

போட்டி நிறுவனங்களை மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த டாடா... இந்த விஷயத்தை கேக்கும்போதே பிரம்மிப்பா இருக்கு!

கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் டாடா பன்ச் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை. எனவே இதன் விற்பனை எண்ணிக்கையை கடந்தாண்டு மே மாதத்துடன் ஒப்பிட இயலாது. இந்த பட்டியலில் ஹூண்டாய் வெனியூ நான்காவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 4,840 ஆக இருந்த ஹூண்டாய் வெனியூ காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு மே மாதம் 8,300 ஆக உயர்ந்துள்ளது.

போட்டி நிறுவனங்களை மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த டாடா... இந்த விஷயத்தை கேக்கும்போதே பிரம்மிப்பா இருக்கு!

இது 71 சதவீத வளர்ச்சியாகும். ஹூண்டாய் நிறுவனமும் வெகு விரைவில் வெனியூ காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்த பட்டியலில் கியா சொனெட் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 6,627 ஆக இருந்த இந்த காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு மே மாதம் 7,899 ஆக உயர்ந்துள்ளது. இது 19 சதவீத வளர்ச்சியாகும்.

போட்டி நிறுவனங்களை மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த டாடா... இந்த விஷயத்தை கேக்கும்போதே பிரம்மிப்பா இருக்கு!

கியா சொனெட் காரின் சிஎன்ஜி மாடல் வெகு விரைவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்டியலில், குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கியுள்ள மற்றொரு காரான மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஆறாவது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் வெறும் 251 ஆக இருந்த இந்த காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு மே மாதம் 5,022 ஆக உயர்ந்துள்ளது.

போட்டி நிறுவனங்களை மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த டாடா... இந்த விஷயத்தை கேக்கும்போதே பிரம்மிப்பா இருக்கு!

இது 1,901 சதவீத வளர்ச்சியாகும். மஹிந்திரா நிறுவனம் இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இந்த பட்டியலில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 373 ஆக இருந்த இந்த காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு மே மாதம் 3,128 ஆக உயர்ந்துள்ளது. இது 739 சதவீத வளர்ச்சியாகும்.

போட்டி நிறுவனங்களை மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த டாடா... இந்த விஷயத்தை கேக்கும்போதே பிரம்மிப்பா இருக்கு!

டொயோட்டா அர்பன் க்ரூஸர் காரின் புதிய தலைமுறை மாடலும் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த பட்டியலில் நிஸான் மேக்னைட் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 1,200 ஆக இருந்த இந்த காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு மே மாதம் 1,920 ஆக உயர்ந்துள்ளது. இது 60 சதவீத வளர்ச்சியாகும்.

போட்டி நிறுவனங்களை மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த டாடா... இந்த விஷயத்தை கேக்கும்போதே பிரம்மிப்பா இருக்கு!

இந்த பட்டியலில் ரெனால்ட் கைகர் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 1,326 ஆக இருந்த ரெனால்ட் கைகர் காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு மே மாதம் 1,380 என சற்றே உயர்ந்துள்ளது. இது 4 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் பத்தாவது மற்றும் கடைசி இடத்தை ஹோண்டா டபிள்யூஆர்-வி பிடித்துள்ளது.

போட்டி நிறுவனங்களை மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த டாடா... இந்த விஷயத்தை கேக்கும்போதே பிரம்மிப்பா இருக்கு!

கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 192 டபிள்யூஆர்-வி கார்களை ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு மே மாதம் 546 ஆக உயர்ந்துள்ளது. இது 184 சதவீத வளர்ச்சியாகும். இந்த செக்மெண்ட்டில் ஏற்கனவே விற்பனையில் உள்ள பல்வேறு கார்களின் புதிய மாடல்கள் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளதால், வரும் மாதங்களில் போட்டி அனல் பறப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube