ஹூண்டாய் நிறுவனத்தின் கடந்த மே மாத விற்பனை ரிப்போர்ட் தற்போது வெளியாகியுள்ளது. இந்நிறுவனம் கடந்த மே மாதம் மட்டும் மொத்தம் 51,263 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு அதாவது 2021 மே மாதம் மொத்தம் 30,703 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. கடந்தாண்டு மே மாதம் கொரோனா இரண்டாம் அலை இருந்ததால் விற்பனை மிகவும் பாதிக்கப்பட்டது.

தற்போது கடந்த மே மாதம் நடந்த விற்பனையில் 42,293 வாகனங்கள் இந்தியாவில் விற்பனையாகியுள்ளது. இது கடந்தாண்டு மே மாதம் நடந்த விற்பனையை விட 17,292 என்ற எண்ணிக்கையில் விற்பனை உயர்வு என்றாலும் கடந்த ஏப்ரல் மாதம் கிட்டத்தட்ட 44 ஆயிரம் வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. அதை ஒப்பிடும் போது 4 சதவீத விற்பனை சரிவைச் சந்தித்துள்ளது.

ஏற்றுமதியைப் பொருத்தவரை மொத்தம் 8,970 வாகனங்கள் ஏற்றுமதியாகியுள்ளது. கடந்தாண்டு இதே மாதத்தில் 5,702 வாகனங்கள் மட்டுமே ஏற்றுமதியாகியுள்ளது. ஒட்டு மொத்தமாக இந்த மாதம் 51,263 வாகனங்களை ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதே கடந்தாண்டு மொத்தம் 30.703 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது.

எப்பொழுதும் அதிகமாக வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனங்களில் ஹூண்டாய் தான் 2வது இடத்தில் இருக்கும். ஆனால் கடந்த 6 மாதங்களில் கடந்த மே மாதம் 2வது முறையாக ஹூண்டாய் நிறுவனம் விற்பனையில் 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதமும் இப்படியாக ஹூண்டாய் நிறுவனம் 3வது இடத்திற்குத் தள்ளப்பட்ட நிலையில் ஜனவரி மாதம் மீண்டும் 2வது இடத்திற்கு முன்னேறியது. தற்போது மே மாதம் மீண்டும் இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

Hyundai | Sales | May 2022 Sales Vs | Difference | Growth % |
May-22 | 42,293 | May 2021 (YoY) | 17,292 | 69.17 |
May-21 | 25,001 | Apr 2022 (MoM) | -1,708 | -3.88 |
Apr-22 | 44,001 | – | – | – |

இந்த இரண்டு முறையும் ஹூண்டாய் நிறுவனத்தை யார் பின்னிற்குத் தள்ளியது தெரியுமா? டாடா நிறுவனம் தான். சமீப காலமாக மக்கள் மத்தியில் டாடா நிறுவனத்தின் கார்மீது மோகம் அதிகமாகியுள்ளது. டாடா நிறுவனம் உறுதியான பாடிபில்டிங்குடனான கார்களை வெளியிடுகிறது. அதனால் மக்கள் இந்நிறுவனத்தின் கார்களை விருப்ப துவங்கினர். அதன் எதிரொலியாக தற்போது டாடா நிறுவனத்தின் கார்கள் விற்பனை சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.

Hyundai | May-22 | May-21 | Difference | Growth % |
Domestic | 42,293 | 25,001 | 17,292 | 69.17 |
Exports | 8,970 | 5,702 | 3,268 | 57.31 |
Cumulative | 51,263 | 30,703 | 20,560 | 66.96 |

தற்போது டாடா நிறுவனம் கடந்த மே மாதம் மொத்தம் 43 ஆயிரம் வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. இது ஹூண்டாய் நிறுவனத்தின் விற்பனையை விட 1,048 வாகனங்கள் அதிகம். ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த சரிவுக் காரணம் டிமாண்ட் குறைபாடு இல்லை. மாறாக அந்நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை பராமரிப்பிற்காக உற்பத்தியை நிறுத்ததும் அப்படியாகக் கடந்த மே மாதம் உற்பத்தியைக் கடந்த 16-21ம் தேதி வரை நிறுத்தியது. அதுதான் அந்நிறுவனத்தின் உற்பத்தியைப் பாதித்தது. இது விற்பனையில் பிரதிபலித்துள்ளது.

6 மாதத்தில் 2வது முறையில் ஹூண்டாய் நிறுவனம் 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. டாடா நிறுவனத்தின் வளர்ச்சியைக் காட்டுகிறது. மார்கெட் பங்கில் தற்போது டாடா நிறுவனம் வளர்ந்து வருவதை யாராலும் மறுக்க முடியாது.