ஹைதராபாத்: மகளிர் உலக குத்துச் சண்டையில் சாம்பியன் பட்டம் வென்ற நிகத் ஐரீனுக்கு 2 கோடி ரூபாய்க்கான காசோலை வழங்கி உள்ளார் தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ். தெலங்கானா உதய தினத்தில் இந்தக் காசோலையை நிகத் வசம் கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 19-ஆம் தேதி அன்று உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் சரித்திர சாதனை ஒன்றைப் படைத்திருந்தார் நிசாமாபாத் பகுதியைச் சேர்ந்த 25 வயதான நிகத் ஜரீன். அவரது வெற்றியை பலரும் பாராட்டினர். அண்மையில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார் நிகத்.