Thalapathy 67: அறிவிப்புக்கு முன்பே கோடிகளை குவிக்கும் ‘தளபதி 67: ஆச்சரியத்தில் கோலிவுட்.! – விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜின் தளபதி 67 படத்தின் வியாபார விவரம்


லோகேஷ், விஜய் இணையும் படத்தின் அறிவிப்பிற்காக வெறித்தனமாக காத்திருக்கின்றனர் ரசிகர்கள். தமிழ் சினிமாவில் தொடர் வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ், கமலின் ‘விக்ரம்’ படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு மொழியில் உருவாகும் ‘வாரிசு’ படத்தினை தொடர்ந்து லோகேஷ் இயக்கத்தில் ‘தளபதி 67’ படத்தில் நடிக்கவுள்ளார் விஜய்.

மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து ‘விக்ரம்’ படத்தை இயக்கினார் லோகேஷ் கனகராஜ். நான்கு வருடங்கள் வெளியாகும் கமல் படம் என்பதால் பிறகு விக்ரமிற்காக ரசிகர்கள் வெறித்தனமான எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்தப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்தது. இந்நிலையில் கடந்த மே மாதம் வெளியான இந்தப்படம் ஒட்டுமொத்த திரையுலகையும் கலக்கியது.

உண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

‘விக்ரம்’ படத்தை தொடர்ந்து மீண்டும் விஜயை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு ‘தளபதி 67’ ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. ‘மாஸ்டர்’ படத்தில் விமர்சனரீதியாக எழுந்த சர்ச்சைகளை சரிகட்ட போவதாகவும், இந்தப்படம் தனது பாணியில் இருப்பதாகவும் லோகேஷ் பேட்டியில் கூறி வருகிறார்.

சிவகார்த்திகேயன்: தளபதிக்கு ‘அரபிக்குத்து’.. அப்போ ஏகேவுக்கு: பரபரக்கும் சோஷியல் மீடியா.!

மேலும் இந்தப்படத்தில் விஜய் நாற்பது வயதான கேங்க்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக ‘தளபதி 67’ படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் 160 கோடி ரூபாய்க்கும், சேட்டிலைட் உரிமையை சன் டிவி 80 கோடி ரூபாய்க்கும் வாங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Thalapathy Vijay: அடுத்தடுத்த பிரச்சனைகளில் சிக்கி வரும் விஜய்: தளபதிக்கு நேரமே சரியில்லை.!

‘தளபதி 67’ அதிகாரப்பூர்வ அறிவிப்பே வெளியாகாத நிலையில் 240 கோடி ரூபாய் வரை வியாபாரம் நடந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி கோலிவுட் வட்டாரத்தினர் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘வாரிசு’ படம் அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube