Thalapathy vijay: விஜய்யின் புகைப்படம்..விளாசி தள்ளும் அஜித் ரசிகர்கள்..! இது காரணமா ? அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சண்டை போடுகிறார்கள்


கடந்த இரண்டு நாட்களாக அஜித்தின் துணிவு திரைப்படம் தான் இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கின்றது. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் துணிவு திரைப்படத்தை அஜித் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

கடைசியாக வெளியான வலிமை திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே தற்போது உருவாகிவரும் துணிவு திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து மிகப்பெரிய வெற்றியை பெரும் என அஜித் ரசிகர்கள் நம்பி இருக்கிறார்கள்.

AK 61: அஜித் – வடிவேலு இடையே இதனால் தான் பிரச்சனை வந்தது..காரணத்தை கூறிய பிரபல நடிகர்..!

இந்நிலையில் இப்படத்தின் முதல் பார்வை மற்றும் டைட்டில் சமீபத்தில் வெளியானது. அதுவரை AK61 என அழைக்கப்பட்டு வந்த இப்படத்திற்கு துணிவு என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இப்போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருந்து வந்தது.

இந்நிலையில் அட்லீயின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் அட்லீயை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது உடன் ஷாரூக்கானும் இருந்துள்ளார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அட்லீ இணையத்தில் வெளியிட்டார். அதுவரை ட்ரெண்டிங்கில் இருந்த துணிவு படத்திற்கு போட்டியாக விஜய்யின் புகைப்படம் இறங்கியது.

இதன் காரணமாக அஜித் ரசிகர்கள் கோபத்தில் விஜய்யை சீண்ட உடனே விஜய் ரசிகர்களும் களத்தில் இறங்கினர். இருவரும் மாறி மாறி மோதிக்கொள்ள இணையதளம் போர்க்களம் ஆனது. மேலும் அஜித்தின் துணிவு பட போஸ்டர் ட்ரெண்ட் ஆகிறது என்பதற்காகவே வேண்டுமென்றே விஜய்யின் புகைப்படம் வெளியிடப்பட்டதாக சில அஜித் ரசிகர்கள் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.



Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube