விக்ரம் படத்தில் சூர்யா இடம்பெறும் காட்சி சுமார் 5 நிமிடத்திற்கு இடம்பெற்றுள்ளது. இதில் இதுவரை இல்லாத அளவுக்கு மிரட்டலான கெட் அப்பில் சூர்யா தோன்றியுள்ளார்.
படம் வெளிவருவதற்கு முன்பு சூர்யாதான் கமலின் மகன் போன்ற தகவல்கள் வெளிவந்தன. ஆனால் இந்த படத்தில் சூர்யாவின் கேரக்டர் ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க – கர்ணன் படத்தை மிஞ்சிய தனுஷின் நானே வருவேன் டிஜிட்டல் விற்பனை
கைதி படத்தில் இடம்பெற்றவர்கள், கைதி படத்தின் கதை உள்ளிட்டவைகளும் விக்ரம் படத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால் முதல்நாள் முதல் காட்சியைப் பார்த்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது.
இந்த நிலையில் கமலுடன் விக்ரம் படத்தில் நடித்தது குறித்து சூர்யா நெகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது-
அன்பான கமல் அண்ணா, எப்படி சொல்றது…? உங்களுடன் திரையில் தோன்ற வேண்டும் என்ற நீண்ட நாள் கனவு நிஜமாகி விட்டது. இதை ஏற்படுத்தி தந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு நன்றி.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அன்பே @ikamalhaasan அண்ணா எப்படி சொல்றது…!?
உங்களுடன் திரையுலகில் வருவது கனவு நனவாகும்..!
இதைச் செய்ததற்கு நன்றி! @Dir_Lokesh அத்தனை அன்பையும் கண்டு நிரம்பி வழிகிறது!! #ரோலக்ஸ் #விக்ரம்— சூரிய சிவகுமார் (@Suriya_offl) ஜூன் 4, 2022
விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் சூர்யா நடித்துள்ளார். நேற்று வெளியான கமலின் விக்ரம் திரைப்படம் நல்ல வசூலை குவித்து வருகிறது. கமல் நடித்த படங்களிலேயே முதல் நாளில் அதிக வசூல் பெற்ற படம் என்ற சாதனையை விக்ரம் உருவாக்கியது.
இதையும் படிங்க – Ilayaraja Birthday: தேசிய விருதுகளை மறுத்த இசைஞானி இளையராஜா!
அடுத்து வரும் நாட்களிலும் விக்ரம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடும் என்பதால், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் மட்டும் விக்ரம் படத்தின் கலெக்சன் ரூ. 100 கோடியை தாண்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.