பாலா இயக்கத்தில் சூர்யா தனது 41வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக தெலுங்கில் பிரபலமாக உள்ள க்ரீத்தி ஷெட்டி நடித்துள்ளார்.
கன்னியாகுமரி பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இதற்கிடையே, சூர்யாவுக்கும் பாலாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. இதற்கு வலு சேர்க்கும் வகையில் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் என அறிவிப்பு வெளிவந்தது.
இதையும் படிங்க – தூரத்தில் நீ வந்தாலே என் மனசில் மழையடிக்கும்! மாளவிகா மோகனன் போட்டோஸ்
பாலா இயக்கி வந்த படம் கைவிடப்பட்டதாக இன்று காலையிலும் வெளிவந்த தகவல்கள். படம் டிராப்பானது குறித்து தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மென்ட்ஸ் விளக்கம் அளிக்கும் என்றும், பாலாவால் சில கோடிகள் இழப்பு ஏற்பட்டதாகவும் வதந்திகள் வந்தன.
இந்நிலையில், பாலா குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க – அழகியே… நடிகை அதிதி ராவின் ரீசன்ட் போட்டோஸ்!
பாலாவுடன் இருக்கும் ஷூட்டிங் ஸ்பாட் படத்தை வெளியிட்ட சூர்யா மீண்டும் படப்பிடிப்பு தளத்திற்கு செல்லும் நாளுக்காக காத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மீண்டும் படப்பிடிப்புக்கு வர காத்திருக்கிறேன்…!! #சூர்யா41 pic.twitter.com/enuJ5MNbZJ
— சூரிய சிவகுமார் (@Suriya_offl) மே 26, 2022
இதனால் சூர்யா 41 திரைப்படம் ஷூட்டிங் தடையின்றி தொடர்ந்து நடைபெறும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பதிவை பார்த்து உற்சாகம் அடைந்துள்ள சூர்யாவின் ரசிகர்கள், ஃபோட்டோவை வைரலாக்கியுள்ளனர்.
சூர்யாவின் கெரியரில் பாலா முக்கிய பங்கை வகித்துள்ளார். ரொமான்டிக் ஹீரோவாக இருந்து வந்த சூர்யாவை நந்தா படத்தின் மூலம் அதிரடி ஆக்சன் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்தவர் பாலா.
அடுத்து பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த பிதாமகன் திரைப்படத்தில் காமெடி, ஆக்சன், காதல் என எல்லாவிதமான காட்சிகளிலும் சூர்யா பின்னியெடுத்திருப்பார். அந்த வகையில் பாலா இயக்கும் சூர்யாவின் 41வது திரைப்படம் இன்னொரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.