இந்தியாவில் பலரும் தவம் கிடக்கும் கார் நாளை விற்பனைக்கு அறிமுகம்… சேல்ஸ் பட்டைய கௌப்ப போகுது!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் (Volkswagen Virtus). இது மிட்-சைஸ் செடான் ரகத்தை சேர்ந்த கார் ஆகும். ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் விர்டுஸ் செடான் காரை இந்திய சந்தையில் நாளை (ஜூன் 9) விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

இந்தியாவில் பலரும் தவம் கிடக்கும் கார் நாளை விற்பனைக்கு அறிமுகம்... சேல்ஸ் பட்டைய கௌப்ப போகுது!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் விர்டுஸ் செடான் காரை இந்தியா முழுவதும் உள்ள தனது டீலர்ஷிப்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை ஏற்கனவே தொடங்கி விட்டது. இந்த சூழலில் நாளை இந்த காரின் விலை அறிவிக்கப்படவுள்ளது. சரியான விலையில் அறிமுகம் செய்யப்பட்டால், ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார் விற்பனையில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக தென்படுகின்றன.

இந்தியாவில் பலரும் தவம் கிடக்கும் கார் நாளை விற்பனைக்கு அறிமுகம்... சேல்ஸ் பட்டைய கௌப்ப போகுது!

ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா ஆகிய கார்களில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே MQB-A0-IN பிளாட்பார்ம் அடிப்படையில்தான் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரும் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரில் மொத்தம் 2 பெட்ரோல் இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படும்.

இந்தியாவில் பலரும் தவம் கிடக்கும் கார் நாளை விற்பனைக்கு அறிமுகம்... சேல்ஸ் பட்டைய கௌப்ப போகுது!

அவை 1.0 லிட்டர், 3-சிலிண்டர், டிஎஸ்ஐ மற்றும் 1.5 லிட்டர், 4-சிலிண்டர், டிஎஸ்ஐ இன்ஜின்கள் ஆகும். இதில், 1.0 லிட்டர் இன்ஜின் அதிகபட்சமாக 114 பிஹெச்பி பவரையும், 178 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும் வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 1.5 லிட்டர் இன்ஜின் அதிகபட்சமாக 148 பிஹெச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க் திறனை உருவாக்கும் வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் பலரும் தவம் கிடக்கும் கார் நாளை விற்பனைக்கு அறிமுகம்... சேல்ஸ் பட்டைய கௌப்ப போகுது!

6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் மற்றும் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி என ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரில் மொத்தம் 3 கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும். ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரை நாங்கள் ஏற்கனவே ஓட்டி பார்த்து விட்டோம். பல்வேறு விதங்களில் இந்த கார் அப்போது எங்களை வெகுவாக கவர்ந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இந்தியாவில் பலரும் தவம் கிடக்கும் கார் நாளை விற்பனைக்கு அறிமுகம்... சேல்ஸ் பட்டைய கௌப்ப போகுது!

ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரில் வசதிகளுக்கு சற்றும் பஞ்சமில்லை. இந்த காரின் முன் பகுதியில் எல்இடி ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. அதே சமயம் பின் பகுதியில் எல்இடி டெயில்லைட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. புதிய 16 இன்ச் அலாய் வீல்களில் இந்த கார் இயங்குகிறது. அதே சமயம் இந்த காரில் எலெக்ட்ரிக் சன்ரூஃப் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பலரும் தவம் கிடக்கும் கார் நாளை விற்பனைக்கு அறிமுகம்... சேல்ஸ் பட்டைய கௌப்ப போகுது!

இதுதவிர முன் பகுதியில் வென்டிலேட்டட் இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜிங், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 10 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரில் வழங்கப்பட்டுள்ளன. ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார் மொத்தம் 6 வண்ண தேர்வுகளில் கிடைக்கும்.

இந்தியாவில் பலரும் தவம் கிடக்கும் கார் நாளை விற்பனைக்கு அறிமுகம்... சேல்ஸ் பட்டைய கௌப்ப போகுது!

விலையை தவிர ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரை பற்றிய அனைத்து தகவல்களும் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு விட்டன. இந்த காரின் விலையும் நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விடும். இதை தெரிந்து கொள்வதற்காக வாடிக்கையாளர்கள் பலரும் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.

இந்தியாவில் பலரும் தவம் கிடக்கும் கார் நாளை விற்பனைக்கு அறிமுகம்... சேல்ஸ் பட்டைய கௌப்ப போகுது!

இந்திய சந்தையில் ஹோண்டா சிட்டி மற்றும் மாருதி சுஸுகி சியாஸ் போன்ற கார்கள் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரின் மிக முக்கியமான போட்டியாளர்களாக உள்ளன. இதுதவிர ஸ்கோடா ஸ்லாவியா காருக்கும், ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார் விற்பனையில் மிக கடுமையான போட்டியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் பலரும் தவம் கிடக்கும் கார் நாளை விற்பனைக்கு அறிமுகம்... சேல்ஸ் பட்டைய கௌப்ப போகுது!

ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா ஆகிய நிறுவனங்கள் இந்தியா 2.0 திட்டத்தின் கீழ், பல்வேறு புதிய கார்களை இந்திய சந்தையில் தொடர்ச்சியாக அறிமுகம் செய்து வருகின்றன. இந்த வரிசையில் இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் வெளிவரும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக விர்டுஸ் செடான் கார் உள்ளது.

இந்தியாவில் பலரும் தவம் கிடக்கும் கார் நாளை விற்பனைக்கு அறிமுகம்... சேல்ஸ் பட்டைய கௌப்ப போகுது!

ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார்தான், இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் வெளிவந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் முதல் கார் ஆகும். இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது. ஃபோக்ஸ்வேகன் டைகுன் காருக்கும், இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதேபோல் விர்டுஸ் செடான் காருக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் எதிர்பார்க்கிறது.

Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube