நம்மூர் ராயல் என்பீல்டு தயாரிப்புடன் பிரபல ஹாலிவுட் நடிகர்!! நேரடியா டிசைன் மையத்திற்கே வந்துட்டாரு…!

ஹாலிவுட் படம் பார்ப்பவர்களுக்கு ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் படங்களை பற்றி தெரிந்திருக்கும். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒன்று என இதுவரையில் 8 பாகங்களில் திரைக்கு வந்துள்ளதால் ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் படங்களுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த படங்களில் பெரும்பாலும் கார் & பைக் ஸ்டண்ட்களே பிரதானமாக காட்டப்பட்டிருக்கும்.

நம்மூர் ராயல் என்பீல்டு தயாரிப்புடன் பிரபல ஹாலிவுட் நடிகர்!! நேரடியா டிசைன் மையத்திற்கே வந்துட்டாரு...!

மேலும் இந்த படங்கள் உலகளவில் பிரபலமானதற்கு மற்றொரு காரணம், இவற்றில் முன்னணி ஹாலிவுட் நடிகர்களான வின் டீசல் மற்றும் டுவானே ஜான்சன் போன்றோர் நடித்துள்ளனர். இவர்கள் மட்டுமின்றி கொரிய-அமெரிக்க நடிகரான சுங்-ஹோ காங் ஃபாஸ்ட் & ஃபூரியஸின் 3வது டோக்கியோ டிரிஃப்ட் பாகத்தில் இருந்து தொடர்ச்சியாக அனைத்து பாகங்களிலும் நடித்து வருகிறார்.

நம்மூர் ராயல் என்பீல்டு தயாரிப்புடன் பிரபல ஹாலிவுட் நடிகர்!! நேரடியா டிசைன் மையத்திற்கே வந்துட்டாரு...!

ஹான் லூ என்கிற கதாபாத்திர பெயரில் நடித்துவரும் இவர் அமெரிக்கா, கொரிய தீபகற்பம் என இரு நாடுகளிலும் பரீட்சையமானவராக விளங்குவதால், இவருக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர் கூட்டம் ஏராளம். இந்த நிலையில் சுங் காங் இங்கிலாந்தில் உள்ள ராயல் என்பீல்டின் ஆராய்ச்சி & கண்டுப்பிடிப்பு மையத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவினை தான் கீழே காண்கிறீர்கள்.

இந்த வீடியோவில், பிராண்டின் 121 வருட பழமையான வரலாற்றை உணர்ந்ததாக குறிப்பிட்டுள்ள சுங் காங் அங்கிருந்த ராயல் என்பீல்டின் இண்டர்செப்டர் 650 & காண்டினெண்டல் ஜிடி650 பைக்குகளை பார்வையிட்டுள்ளார். நிறுவனத்தின் ஆராய்ச்சி & கண்டுப்பிடிப்பு மையமான இதில் அனைத்து பழங்கால & வரலாற்று சிறப்புமிக்க மோட்டார்சைக்கிள்களால் சித்தரிக்கப்பட்ட ராயல் என்பீல்டின் செழுமையான பாரம்பரியத்தை சுங் காங் சுற்றிப்பார்த்தார்.

நம்மூர் ராயல் என்பீல்டு தயாரிப்புடன் பிரபல ஹாலிவுட் நடிகர்!! நேரடியா டிசைன் மையத்திற்கே வந்துட்டாரு...!

பின்னர் R&D மையத்தில் பணியாற்றுபவர்களுடன் இவர் உரையாடுவதையும் மேலுள்ள வீடியோவில் காணலாம். குறிப்பாக நடிகர் சுங் காங்-ஐ எஸ்ஜி650 கான்செப்ட் மாடல் வெகுவாக ஈர்த்துள்ளது. நியோ-ரெட்ரோ ஸ்டைலில் காட்சியளிக்கும் இந்த 650சிசி கான்செப்ட் பைக்கை ராயல் என்பீல்டு நிறுவனம் முதன்முதலாக கடந்த 2021 EICMA கண்காட்சியில் காட்சிப்படுத்தியது.

நம்மூர் ராயல் என்பீல்டு தயாரிப்புடன் பிரபல ஹாலிவுட் நடிகர்!! நேரடியா டிசைன் மையத்திற்கே வந்துட்டாரு...!

தோற்றத்தை பொறுத்தவரையில், ஒற்றை கேண்டிலிவர் இருக்கை, முனைகளின் கண்ணாடிகளுடன் அகலமான & தட்டையான ஹேண்டில்பார்கள் உள்ளிட்டவற்றுடன் வழக்கமான பாப்பர் ஸ்டைலில் எஸ்ஜி650 கான்செப்ட் மாதிரி காட்சியளிக்கிறது. அலுமினியம் சில்வர் மற்றும் வாத்தின் நீல நிறத்தில் காட்சியளிக்கும் இந்த பைக்கில் என்ஜின் & எக்ஸாஸ்ட் குழாய் மற்ற பைக்குகளை போலவே மேட் கருப்பு நிறத்தில் உள்ளது.

நம்மூர் ராயல் என்பீல்டு தயாரிப்புடன் பிரபல ஹாலிவுட் நடிகர்!! நேரடியா டிசைன் மையத்திற்கே வந்துட்டாரு...!

இந்த பைக்கில் சஸ்பென்ஷன் & பிரேக்கிங் பணிகளை யுஎஸ்டி ஃபோர்க்குகள் மற்றும் இரட்டை டிஸ்க் பிரேக்குகள் கவனித்து கொள்கின்றன. எஸ்ஜி650 பைக்கின் மிக முக்கியமான தோற்ற சிறப்பம்சமாக அதன் முன்பக்கத்தை கூறலாம். ஏனெனில் வட்ட வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள பைக்கின் ஹெட்லைட் கௌலில் இருந்தே முன்பக்க யுஎஸ்டி சஸ்பென்ஷன் ஃபோர்க்குகள் சக்கரத்தை நோக்கி செல்கின்றன.

நம்மூர் ராயல் என்பீல்டு தயாரிப்புடன் பிரபல ஹாலிவுட் நடிகர்!! நேரடியா டிசைன் மையத்திற்கே வந்துட்டாரு...!

இதற்காகவே ஹெட்லைட்டிற்கு கீழே பிரத்யேகமாக இரு துளைகள் வழங்கப்பட்டுள்ளன. பைக்கின் பின்பக்கத்தில் டெயில்லைட்டும் பழமையான ரெட்ரோ ஸ்டைலில் காட்சியளிக்கிறது. எஸ்ஜி650 ஆனது இன்னமும் கான்செப்ட் மாதிரியாகவே உள்ளது. அதாவது இதன் இறுதிக்கட்ட வடிவமைப்பில் பைக்கின் தோற்றத்தில் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம். அது எந்த அளவில் இருக்கும் என்பது இனி வரும் காலங்களில் தான் நமக்கு தெரியவரும்.

நம்மூர் ராயல் என்பீல்டு தயாரிப்புடன் பிரபல ஹாலிவுட் நடிகர்!! நேரடியா டிசைன் மையத்திற்கே வந்துட்டாரு...!

ராயல் என்பீல்டு எஸ்ஜி650 பைக்கில் இண்டர்செப்டர் 650 & காண்டினெண்டல் ஜிடி650 பைக்குகளின் அதே 650சிசி இணையான-இரட்டை சிலிண்டர் என்ஜினே பொருத்தப்படும் என எதிர்பார்க்கிறோம். அதிகப்பட்சமாக 47 பிஎச்பி மற்றும் 52 என்எம் டார்க் திறனை இந்த என்ஜின் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இதே அளவிலான இயக்க ஆற்றலே எஸ்ஜி650 மாடலிலும் கிடைக்கும் என்று உறுதியாக கூறிவிட முடியாது.

நம்மூர் ராயல் என்பீல்டு தயாரிப்புடன் பிரபல ஹாலிவுட் நடிகர்!! நேரடியா டிசைன் மையத்திற்கே வந்துட்டாரு...!

ஏனெனில் என்ஜின் அமைப்பில் சில மாற்றங்களை ராயல் என்பீல்டு கொண்டுவருவதற்கு வாய்ப்புள்ளது. எஸ்ஜி என்பது விரிவாக்கம் ஷூட்கன் (Shotgun) ஆகும். இந்திய சந்தையில் ஷூட்கன் 650 பைக் நடப்பு 2022ஆம் வருடத்தின் இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube