விஜய் நடித்த பிகில் படத்தை தொடர்ந்து, அட்லீ ஷாரூக்கானுடன் இணைந்து ஒரு படம் பண்ணப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இடையே பாதிப்பு ஓராண்டுக்கும் மேலாக நிலவியபோது இந்தப் படம் கைவிடப்பட்டு விட்டதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், அட்லீ – ஷாருக்கான் இணைந்து படம் பண்ணுவது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது, படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வந்தது. இதன் தொடர்ச்சியாக சில நாட்களுக்கு முன்பு ஷாரூக்கான் படத்தின் டைட்டில் டீசர் குறித்த தகவல் வெளியானது.
இதில் படத்திற்கு ஜவான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று அட்லீ இயக்கத்தில் அதிரடி அறிவிப்பாக, ஷாரூக்கான் நடிக்கும் ஜவான் படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது ஜவான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
24 மணிநேரம் கழித்து, நன்றி சொல்ல இதுவே ஒரே வழி!
2023 இன் ஆக்ஷன் என்டர்டெயின்னரை நீங்கள் காண காத்திருக்க முடியாதுhttps://t.co/xMsMCKODFk#ஜவான் ஜூன் 2, 2023 அன்று திரையரங்குகளில்.
இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் & கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.@iamsrk @Atlee_dir @கௌரிகான் @வெங்கி மைசூர் pic.twitter.com/ESU44Boh1Q— ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் (@RedChilliesEnt) ஜூன் 4, 2022
ஜவான் படத்தில் ஷாரூக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். யோகி பாபுவும் படத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. முதன் முறையாக இந்த படத்தில் அனிருத்துடன் அட்லீ இணைகிறார்.
ஜவான் டைட்டில் அறிவிப்பு வீடியோவை பாருங்கள்…
ஜவான் படம் அடுத்த ஆண்டு ஜூன் 2-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க விஜய் பிறந்த நாளையொட்டி வெளியாகுமா தளபதி 66 டைட்டில்? லேட்டஸ்ட் அப்டேட்…
இந்த படத்தை ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் சார்பாக ஷாரூக்கானின் மனைவி கவுரிகான் தயாரிக்கிறார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.