ஜெர்ரி ஹாரிஸ் ஜெயராஜ் என்ற லெஜண்ட் திரைப்படத்திற்காக பாடகர் கேகே கடைசியாக பாடிய தமிழ் பாடல் – தமிழ் செய்திகள்


பிரபல பாடகர் கேகே திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார் என்பதும் அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் இரங்கல் பற்றியும் பார்த்தோம். தமிழ் உட்பட 11 இந்திய மொழிகளில் அவர் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது தமிழில் இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்த பல திரைப்படங்களில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் நடித்த ‘தி லெஜண்ட்’ என்ற திரைப்படத்தில் கேகே ஒரு பாடலை பாடியுள்ளார் என்ற தகவலை அந்த படத்தின் இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரி தங்களது சமூக வலைதளத்தில் பதிவு செய்தார். இந்த பாடல் தான் அவர் பாடிய கடைசி தமிழ்ப்பாடல் ஆகும்.

மேலும் பாடகர் கேகே இந்த பாடலை பாடும் போது எடுத்த வீடியோவையும் ஜேடி ஜெர்ரி பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த பாடல் குறித்து இயக்குனர்கள் ஜேடி ஜெர்ரி கூறியிருப்பதாவது:

singer kk01062022m1

கேகே எனும் மாயக்குரலோனின் மறைவு இசை உலகில் ஒரு பேரிழப்பு. அவரோடு எங்கள் தி லெஜண்ட் படத்திற்கு சமீபத்தில்தான் கொஞ்சி கொஞ்சி பாடலை மும்பாயில் ஒலிப்பதிவு செய்தோம். என்ன ஒரு உற்சாகம், ஆர்வம், ஈடுபாடு.. எத்தனை முறை பாடினாலும் ஆற்றல் குறையாத குரல்.. பழகுவதற்கு இனிமை ,பாடலில் தனித்துவம். சந்தித்த சில மணிநேரத்திலேயே ரொம்ப நாள் பழகிய உணர்வைத் தர ஒரு சிலரால்தான் முடியும்.

எங்களுக்குப் பாட வந்திருந்தாலும் எங்களை ஒரு விருந்தினர் போல கவனித்தது ரொம்ப அபூர்வமான குணம். காலத்திற்கும் காதில் வாசம் செய்யும் பாடலை பாடிய அந்த கலைஞன் இப்போது இல்லை என்பதை நம்ப மறுக்கிறது மனம். வாழ்வின் நிலையமைச் சொல்லி செல்லும் நாட்கள் எங்களது ஆழ்ந்த வருத்தத்தைப் பதிவு செய்கிறோம்





Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube