இந்தியால மிக மிக அதிக விலையில் விற்பனைக்கு கிடைக்கும் ஸ்கூட்டர்களின் பட்டியல்… இவற்றை அடிச்சிக்க ஆளே இல்ல!

கார்களைப் போல் இருசக்கர வாகனங்களிலும் அதிக பிரீமியம் அம்சங்களை விரும்புபவர்கள் நம் நாட்டில் இருக்கின்றனர். அத்தகையோரைக் கவரும் பொருட்டு முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் சில அதிகம் பிரீமியம் அம்சங்களைக் கொண்ட டூ-வீலர்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் சில ஒரு நிமிஷம் நம்மை ஆடி போக வைக்கின்ற அளவிற்கு மிக மிக அதிக விலையைக் கொண்டவையாக காட்சியளிக்கின்றன.

கார்களுக்கு இணையான விலையில் ஸ்கூட்டரா?.. இந்தியாவில் மிக அதிக விலையில் விற்பனைக்கு கிடைக்கும் ஸ்கூட்டர்கள்!

அதிலும், ஸ்கூட்டர்கள் சில காருக்கு இணையான விலையைக் கொண்டிருப்பதை பலரை ஆச்சரியத்தில் மூழ்க வைக்கும் வகையில் உள்ளது. ஸ்கூட்டர்கள் என்றாலே நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களுக்கான வாகனம் என்கிற கருத்துக்கு புறம்பாக அவை உள்ளன. இத்தகைய அதிக விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் டாப் 5 ஸ்கூட்டர்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

கார்களுக்கு இணையான விலையில் ஸ்கூட்டரா?.. இந்தியாவில் மிக அதிக விலையில் விற்பனைக்கு கிடைக்கும் ஸ்கூட்டர்கள்!

பிஎம்டபிள்யூ சி 400 சிடி (BMW C 400 GT)

விலை: ரூ. 10.40 லட்சம்

பிஎம்டபிள்யூ தயாரிப்பு என்றாலே சொகுசு வசதிகளுக்கு சற்றும் குறைச்சலிருக்காது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இதேபோல் அதன் விலையும் மிக அதிகமானதாக இருக்கும். இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனம் விற்பனைக்கு வழங்கும் மேக்ஸி ரக ஸ்கூட்டர் மாடலான சி 400 டி உள்ளது.

கார்களுக்கு இணையான விலையில் ஸ்கூட்டரா?.. இந்தியாவில் மிக அதிக விலையில் விற்பனைக்கு கிடைக்கும் ஸ்கூட்டர்கள்!

இதன் எக்ஸ்-ஷோரூம் விலையே ரூ. 10.40 லட்சம் ஆகும். இத்தகைய உச்சபட்ச விலையைக் கொண்டிருப்பதனாலேயே நாட்டின் மிக விலையுயர்ந்த ஸ்கூட்டராக அது காட்சியளிக்கின்றது. முரட்டுத் தனமான தோற்றத்தில் காட்சியளிக்கும் இந்த மேக்ஸி ஸ்கூட்டரில் 33.5 பிஎச்பி பவர் மற்றும் 35 என்எம் டார்க்கை வெளியேற்றும் 350 சிசி, சிங்கிள் சிலிண்டர் வாட்டர் கூல்டு மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கார்களுக்கு இணையான விலையில் ஸ்கூட்டரா?.. இந்தியாவில் மிக அதிக விலையில் விற்பனைக்கு கிடைக்கும் ஸ்கூட்டர்கள்!

சிறப்பு அம்சங்களாக ஸ்கூட்டரில் ஸ்மார்ட் ஃபோன் இணைப்பு மற்றும் திருப்பத்திற்கு திருப்பம் வழித்தடம் பற்றிய தகவலை வழங்கும் நேவிகேஷன் கருவி, முழு வண்ண டிஎஃப்டி திரை உள்ளிட்ட அம்சங்கள் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுமாதிரியான மிக அதிக தொழில்நுட்ப வசதிகளை சி 400 ஜிடி பெற்றிருக்கின்றன காரணத்தினாலேயே அதன் விலை இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் கார் மாடல்கள் சிலவற்றைக் காட்டிலும் அதிகமானதாகக் காட்சியளிக்கின்றது. இந்த விலையில் இரு மாருதி ஆல்டோ கார்களை வாங்கி விடலாம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

கார்களுக்கு இணையான விலையில் ஸ்கூட்டரா?.. இந்தியாவில் மிக அதிக விலையில் விற்பனைக்கு கிடைக்கும் ஸ்கூட்டர்கள்!

கீவே சிக்ஸ்டீஸ் 300ஐ மற்றும் விஸ்டே 300 (Keeway Sixties 300i & Vieste 300)

விலை: ரூ. 2.99 லட்சம்

இந்தியாவில் பிஎம்டபிள்யூ சி 400 ஜிடி மேக்ஸி ஸ்கூட்டருக்கு அடுத்தபடியாக அதிக விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் ஸ்கூட்டராக கீவே நிறுவனத்தின் சிக்ஸ்டீஸ் 300ஐ மற்றும் விஸ்டே 300 ஆகியவை உள்ளன. இவ்விரு ஸ்கூட்டர்களும் மிக மிக சமீபத்திலேயே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன.

கார்களுக்கு இணையான விலையில் ஸ்கூட்டரா?.. இந்தியாவில் மிக அதிக விலையில் விற்பனைக்கு கிடைக்கும் ஸ்கூட்டர்கள்!

ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த இந்நிறுவனம் மிக சமீபத்திலேயே இந்தியாவில் கால் தடம் பதித்தது. இதனைத் தொட்ர்ந்து ஒட்டுமொத்தமாக மூன்று தயாரிப்புகளை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அவற்றில் இரண்டே இந்த சிக்ஸ்டீஸ் 300ஐ மற்றும் விஸ்டே 300. சிக்ஸ்டீஸ் 300 ஐ வெஸ்பாவிற்கு போட்டியாகக் கொண்டு வரப்பட்ட ரெட்ரோ கிளாசிக் தோற்றம் கொண்ட ஸ்கூட்டர் ஆகும். விஸ்டே 300 என்பது மேக்ஸி ரக ஸ்கூட்டர்.

கார்களுக்கு இணையான விலையில் ஸ்கூட்டரா?.. இந்தியாவில் மிக அதிக விலையில் விற்பனைக்கு கிடைக்கும் ஸ்கூட்டர்கள்!

இவை இரண்டும் ஒரே மாதிரியான எஞ்ஜினைக் கொண்டிருக்கின்றன. இரு ஸ்கூட்டர்களிலும் 278.8 சிசி திறனை வெளியேற்றக் கூடிய சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 18.7 எச்பி பவரை 6,500 ஆர்பிஎம்மிலும், 22 என்எம் டார்க்கை 6,000 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும். இது தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் பிற ஸ்கூட்டர்களைக் காட்டிலும் மிக திறன் ஆகும்.

கார்களுக்கு இணையான விலையில் ஸ்கூட்டரா?.. இந்தியாவில் மிக அதிக விலையில் விற்பனைக்கு கிடைக்கும் ஸ்கூட்டர்கள்!

வெஸ்பா எலிகண்ட் 150 எஃப்எல் (Vespa Elegante 150 FL)

விலை: ரூ. 1.54 லட்சம்

இந்தியாவில் கிளாசிக் தோற்றத்தில் விற்பனைக்குக் கிடைக்கும் ஸ்கூட்டர் மாடல்களில் இதுவும் ஒன்று. இந்த வாகனத்தில் பெரிய சி வடிவ விண்ட் ஸ்கிரீன், வட்ட வடிவ ஹெட்லேம்ப் உள்ளிட்டவை ஸ்கூட்டரின் கிளாசிக் தோற்றத்திற்கு கூடுதல் மெருகேற்றும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது தவிர இரட்டை துண்டு அமைப்பிலான இருக்கையும் ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கார்களுக்கு இணையான விலையில் ஸ்கூட்டரா?.. இந்தியாவில் மிக அதிக விலையில் விற்பனைக்கு கிடைக்கும் ஸ்கூட்டர்கள்!

மேலும், தொழில்நுட்ப வசதிகளும் இந்த வாகனத்தில் சற்று அதிகமாகவே இடம் பெற்றிருக்கின்றன. அந்தவகையில், நடுத்தர டிஜிட்டல் அம்சம் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் இருசக்கர வாகனத்தில் வழங்கப்பட்டிருக்கின்றது. இத்துடன், டிஸ்க் பிரேக் ஏபிஎஸ் அம்சத்துடன் வழங்கப்பட்டுள்ளது. இது மிகுந்த பாதுகாப்பான பிரேக்கிங்கை வழங்க உதவும். இது ஓர் 150 சிசி ஸ்கூட்டர் ஆகும்.

கார்களுக்கு இணையான விலையில் ஸ்கூட்டரா?.. இந்தியாவில் மிக அதிக விலையில் விற்பனைக்கு கிடைக்கும் ஸ்கூட்டர்கள்!

வெஸ்பா ரேசிங் சிக்ஸ்டீஸ் 150 (Vespa Racing Sixties 150)

விலை ரூ. 1.51 லட்சம்

இந்தியாவின் காஸ்ட்லியான ஸ்கூட்டர்களின் பட்டியலில் வெஸ்பாவின் ரேசிங் சிக்ஸ்டீஸ் 150 மாடலும் இடம் பிடித்துள்ளது. இதுவும் ஓர் 150 சிசி கிளாசிக் டைப் ஸ்கூட்டர் ஆகும். 60ஸ் கால கட்டத்தில் விற்பனைக்குக் கிடைத்த ஸ்கூட்டர்களை நினைவுப்படுத்தும் விதமாக இந்த இருசக்கர வாகனத்தை நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

கார்களுக்கு இணையான விலையில் ஸ்கூட்டரா?.. இந்தியாவில் மிக அதிக விலையில் விற்பனைக்கு கிடைக்கும் ஸ்கூட்டர்கள்!

ஸ்கூட்டரில் 150 சிசி, 3 வால்வ் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 10.3 பிஎச்பி மற்றும் 10.6 என்எம் டார்க்கை வெளியேற்றும். இதே எஞ்ஜினே வெஸ்பா எலிகண்டிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி சிறப்பம்சங்கள் விஷயத்திலும் இரு ஸ்கூட்டர்களும் ஒரே மாதிரியானதாகக் காட்சியளிக்கின்றன. ஆனால், தோற்றத்தில் மட்டும் இரண்டும் பலமடங்கு மாறுபட்டுக் காட்சியளிக்கின்றன.

கார்களுக்கு இணையான விலையில் ஸ்கூட்டரா?.. இந்தியாவில் மிக அதிக விலையில் விற்பனைக்கு கிடைக்கும் ஸ்கூட்டர்கள்!

அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 160 (Aprilia SXR 160)

விலை: ரூ. 1.41 லட்சம்

நம்முடைய இந்த காஸ்ட்லியான ஸ்கூட்டர்களின் பட்டியலிலேயே சற்று விலைக் குறைவான ஸ்கூட்டராக அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 160 உள்ளது. இந்த மேக்ஸி ரக ஸ்கூட்டரிலும் பிரீமியம் அம்சங்கள் ஏராளம். எல்இடி டிஆர்எல்-கள், ஹெட்லேம்புகள், உயரமான விண்ட் ஸ்கிரீன், 12 அங்குல அலாய் வீல்கள் உள்ளிட்டவை ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கார்களுக்கு இணையான விலையில் ஸ்கூட்டரா?.. இந்தியாவில் மிக அதிக விலையில் விற்பனைக்கு கிடைக்கும் ஸ்கூட்டர்கள்!

இதுதவிர அதிக மிருதுவான இருக்கை, மிக சிறந்த சஸ்பென்ஷன் ஆகிய அம்சங்களும் எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஸ்கூட்டரில் 160 சிசி திறன் கொண்ட எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 10.7 பிஎச்பி பவரை வெளியேற்றக் கூடியது.

Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube