இப்படிப்பட்ட அசத்தலான தோற்றத்தில் புதிய ஹூண்டாய் வென்யூ ஃபேஸ்லிஃப்ட் காரா!! ஸ்பை படம் வெளிவந்தது!

இந்தியாவில் அதிகரித்துவரும் காம்பெக்ட் எஸ்யூவி கார்களின் வளர்ச்சியை கண்டு ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2019இல் அறிமுகப்படுத்திய மாடல் தான் வென்யூ ஆகும். பிரிவிலேயே முதல்முறையாக ப்ளூலிங்க் இணைப்பு கார் தொழிற்நுட்பத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட மாடல் என்கிற சிறப்பு வென்யூவிற்கு உள்ளது.

இப்படிப்பட்ட அசத்தலான தோற்றத்தில் புதிய ஹூண்டாய் வென்யூ ஃபேஸ்லிஃப்ட் காரா!! ஸ்பை படம் வெளிவந்தது!

இதன் மூலமாக 33 இணைப்பு கார் வசதிகளை வென்யூ பெற்றது. அத்துடன் அறிமுகத்தில் இருந்து சில மாதங்கள் கழித்து, சுருக்கமாக ஐஎம்டி எனப்படும் இண்டெலிஜண்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷனையும் வென்யூவில் ஹூண்டாய் நிறுவனம் கொண்டுவந்தது. இந்த நிலையில் கிட்டத்தட்ட 3 வருட அறிமுகத்திற்கு பிறகு வென்யூவிற்கு ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை வழங்க தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

இப்படிப்பட்ட அசத்தலான தோற்றத்தில் புதிய ஹூண்டாய் வென்யூ ஃபேஸ்லிஃப்ட் காரா!! ஸ்பை படம் வெளிவந்தது!

இந்த நிலையில்தான் தற்போது முற்றிலும் புதிய நிறத்தில் வென்யூ ஃபேஸ்லிஃப்ட் கார் ஒன்றின் சோதனை மாதிரி பொது சாலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரஷ்லேன் செய்திதளம் மூலமாக நமக்கு கிடைக்க பெற்றுள்ள ஸ்பை படத்தினை கீழே காணலாம். இதில் புதிய வென்யூ ஃபேஸ்லிஃப்ட் காரின் பின்பகுதியை மட்டுமே பார்க்க முடிகிறது.

இப்படிப்பட்ட அசத்தலான தோற்றத்தில் புதிய ஹூண்டாய் வென்யூ ஃபேஸ்லிஃப்ட் காரா!! ஸ்பை படம் வெளிவந்தது!

Source: Rushlane

இதன் மூலமாக திருத்தப்பட்ட வடிவிலான எல்இடி டெயில்லேம்ப்கள், அடர் நிறத்திலான உள்ளீடுகள் & பிரதிப்பலிப்பான்கள் உடன் ரீடிசைனில் பின்பக்க பம்பர், அகலமான சில்வர் நிற சறுக்கு தட்டு மற்றும் காரின் உடல் நிறத்தில் ஸ்பாய்லர் உள்ளிட்டவற்றை புதிய வென்யூ ஃபேஸ்லிஃப்ட் மாடல் பெற்றுவரவுள்ளதை அறிய முடிகிறது. அத்துடன் காரின் சில்வர் நிறத்தில் மேற்கூரை கம்பிகள் மற்றும் சுறா துடுப்பு வடிவிலான ஆண்டென்னாவையும் இந்த ஸ்பை படத்தில் பார்க்க முடிகிறது.

இப்படிப்பட்ட அசத்தலான தோற்றத்தில் புதிய ஹூண்டாய் வென்யூ ஃபேஸ்லிஃப்ட் காரா!! ஸ்பை படம் வெளிவந்தது!

மேலும், சன்ரூஃப்-பும் இருப்பதுபோல் தெரிகிறது. ஆதலால் இது புதிய வென்யூ ஃபேஸ்லிஃப்ட் காரின் டாப் வேரியண்டாக இருக்கலாம். இவற்றுடன் புதிய வென்யூவில் வழங்கப்பட உள்ள புதிய டிசைனிலான 16-இன்ச் அலாய் சக்கரங்களும் இந்த ஸ்பை படத்தில் நம்மை வசீகரிக்கின்றன. இந்த படத்தில் காரின் முன்பக்கத்தை காண முடியாவிடினும், க்ரோம் ஸ்லாட்களுடன் பெரிய அளவிலான க்ரில், திருத்தப்பட்ட டிசைனில் முன் பம்பர், எல்இடி ஹெட்லைட்கள் & ஃபாக் விளக்குகளுடன் எல்இடி டிஆர்எல்-கள் போன்ற அப்டேட்களை முன்பக்கத்தில் எதிர்பார்க்கலாம்.

இப்படிப்பட்ட அசத்தலான தோற்றத்தில் புதிய ஹூண்டாய் வென்யூ ஃபேஸ்லிஃப்ட் காரா!! ஸ்பை படம் வெளிவந்தது!

வெளிப்புறத்திற்கு இணையாக புதிய வென்யூ ஃபேஸ்லிஃப்ட் காரின் உட்புறத்திலும் ஏகப்பட்ட புதிய தொழிற்நுட்ப வசதிகளையும், சவுகரிய அம்சங்களையும் ஹூண்டாய் வழங்க முயற்சிக்கும். இதன்படி பிரிவிலேயே முதல்முறையாக அலெக்ஸா & கூகுள் உதவி உடன் ஹோம்-டூ-கார் (H2C) வசதியை கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பை இந்த புதிய மாடலில் எதிர்பார்க்கிறோம்.

இப்படிப்பட்ட அசத்தலான தோற்றத்தில் புதிய ஹூண்டாய் வென்யூ ஃபேஸ்லிஃப்ட் காரா!! ஸ்பை படம் வெளிவந்தது!

இதன் புதிய இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பு இந்தியாவின் 10 விதமான மாநில மொழிகளை ஏற்கும் என கூறப்படுகிறது. அத்துடன் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழக்கம்போல் தொடரப்படலாம். பயணிகளின் சவுகரியத்திற்கு 2-நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பின் இருக்கைகள் மற்றும் ஹூண்டாய் ப்ளூலிங்க் செயலி உடன் 60க்கும் மேற்பட்ட இணைப்பு கார் வசதிகள் உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக கொடுக்கப்பட உள்ளன.

இப்படிப்பட்ட அசத்தலான தோற்றத்தில் புதிய ஹூண்டாய் வென்யூ ஃபேஸ்லிஃப்ட் காரா!! ஸ்பை படம் வெளிவந்தது!

ஸ்போர்ட், நார்மல் & ஈக்கோ என மொத்தம் 3 விதமான டிரைவிங் மோட்களுடன் அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய வென்யூ ஃபேஸ்லிஃப்ட் காரில் தற்போதைய அதே 2 பெட்ரோல் & 1 டீசல் என்ஜின் தேர்வுகள் தொடரப்படுவதற்கே அதிக வாய்ப்புள்ளது. இதில் ஒன்றான 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 83 எச்பி மற்றும் 114 என்எம் டார்க் திறனையும், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 120 எச்பி & 172 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியவைகளாக உள்ளன.

இப்படிப்பட்ட அசத்தலான தோற்றத்தில் புதிய ஹூண்டாய் வென்யூ ஃபேஸ்லிஃப்ட் காரா!! ஸ்பை படம் வெளிவந்தது!

இதில் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனும், டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு ஐஎம்டி & 7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் தேர்வுகளும் தற்சமயம் வழங்கப்படுகின்றன. 3வது என்ஜின் தேர்வான 1.5 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 100 எச்பி & 240 என்எம் டார்க் திறன் வரையில் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இதனுடன் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.

Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube