யாருக்கும் தெரியாத பைலட்களின் இன்னொரு பக்கம்… கை நிறைய சம்பாதித்தாலும் இவ்ளோ ரிஸ்க் இருக்கா?

நாம் ஒவ்வொருவரும் பைலட்களை ஹீரோக்களாக பார்க்கிறோம். இன்னும் சொல்லப்போனால் பைலட்கள் மீது ஒரு சிலருக்கு பொறாமை கூட உள்ளது. பைலட்கள் கை நிறைய சம்பாதிப்பதும், பல்வேறு நாடுகளுக்கு சென்று வருவதும்தான் இதற்கு காரணம். பைலட்டாக வேலை செய்வதால் கிடைக்க கூடிய நன்மைகளை அடுக்கி கொண்டே போகலாம்.

யாருக்கும் தெரியாத பைலட்களின் இன்னொரு பக்கம்... கை நிறைய சம்பாதித்தாலும் இவ்ளோ ரிஸ்க் இருக்கா?

ஆனால் பைலட்களுடைய வாழ்க்கையின் மறுபக்கத்தை நாம் யாரும் பார்ப்பதில்லை. பைலட்டாக வேலை செய்வதால், தனிப்பட்ட வாழ்க்கையில் நிறைய பிரச்னைகளை அவர்கள் சந்திக்க வேண்டியுள்ளது. அந்த குறைகள் என்னென்ன? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். இவ்வளவு பிரச்னைகளையும் சமாளித்து கொண்டுதான் அவர்கள் இன்முகத்துடன் வேலை செய்து வருகின்றனர்.

யாருக்கும் தெரியாத பைலட்களின் இன்னொரு பக்கம்... கை நிறைய சம்பாதித்தாலும் இவ்ளோ ரிஸ்க் இருக்கா?

பைலட்கள் பெரும்பாலும் வீட்டில் இருந்து தொலைதூரத்தில்தான் இருப்பார்கள். இது அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக குழந்தைகள் இருந்தால் அவர்களுடைய பிரச்னைகள் இன்னும் பெரிதாக இருக்கும். வீட்டை விட்டு தொலைதூரத்தில் இருப்பது எவ்வளவு சிரமமான விஷயம்? என்பதை நாங்கள் விளக்க வேண்டியதில்லை.

யாருக்கும் தெரியாத பைலட்களின் இன்னொரு பக்கம்... கை நிறைய சம்பாதித்தாலும் இவ்ளோ ரிஸ்க் இருக்கா?

பைலட்கள் பெரும்பாலானோருக்கு விவாகரத்து நடப்பதற்கு இது மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. ஆம், உண்மைதான். விடுமுறை நாட்களில் கூட பைலட்கள் வேலை செய்ய வேண்டிய சூழல் ஏற்படலாம். குறிப்பாக பண்டிகை காலங்களில் அவர்கள் வீட்டில் இருப்பது சிரமம். இதுபோன்ற பணி சூழல் விவாகரத்துகளுக்கு காரணமாக அமைகிறது.

யாருக்கும் தெரியாத பைலட்களின் இன்னொரு பக்கம்... கை நிறைய சம்பாதித்தாலும் இவ்ளோ ரிஸ்க் இருக்கா?

அத்துடன் பண்டிகை நாட்களில் உடன் இல்லாவிட்டால் பைலட்களின் குடும்பத்தினர் அவர்களை நிச்சயமாக ‘மிஸ்’ செய்வார்கள். மேலும் பைலட்களின் ‘ஷெட்யூல்’ அடிக்கடி மாற்றமடைந்து கொண்டே இருக்கும். இதற்கு

அடுத்ததாக பல்வேறு உடல் நலன் சார்ந்த பிரச்னைகளையும் பைலட்கள் சமாளிக்க வேண்டி இருக்கிறது. இரவு நேரங்களில் வேலை செய்தாக வேண்டிய சூழ்நிலை பைலட்களுக்கு உள்ளது.

யாருக்கும் தெரியாத பைலட்களின் இன்னொரு பக்கம்... கை நிறைய சம்பாதித்தாலும் இவ்ளோ ரிஸ்க் இருக்கா?

தொடர்ச்சியாக பயணம் செய்து கொண்டே இருப்பதும், ஒழுங்கற்ற தூக்க முறைகளும் பைலட்களின் உடல் நலனில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. பைலட்கள் சோர்வால் அவதிப்படுவதை நாம் அதிகமாக காண முடியும். தூங்குவதிலும் கூட பைலட்கள் பலர் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். பைலட்கள் பலருக்கு தூக்கமின்மை பிரச்னை இருக்கிறது.

யாருக்கும் தெரியாத பைலட்களின் இன்னொரு பக்கம்... கை நிறைய சம்பாதித்தாலும் இவ்ளோ ரிஸ்க் இருக்கா?

அத்துடன் கதிர்வீச்சுக்கு ஆளாவதால், பைலட்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது. இந்த பிரச்னைகளை எல்லாம் சமாளித்து பைலட்கள் எப்போதும் ‘ஃபிட்’ ஆக இருக்க வேண்டும். பைலட்கள் அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். விமானங்களை இயக்குவதற்கு அவர்கள் ‘ஃபிட்’ ஆக இருக்கிறார்களா? என்பது இதன் மூலம் உறுதி செய்யப்படும்.

யாருக்கும் தெரியாத பைலட்களின் இன்னொரு பக்கம்... கை நிறைய சம்பாதித்தாலும் இவ்ளோ ரிஸ்க் இருக்கா?

மருத்துவ பரிசோதனைகளில் தோல்வியடைந்தால், அவர்களின் வாழ்க்கை பாதையே மாறி விடுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. எனவே கடுமையான போராட்டங்களுக்கு மத்தியில் தங்களின் ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிக்க வேண்டிய தேவை பைலட்களுக்கு இருக்கிறது. ஆரோக்கியம் மிக நன்றாக இருக்க வேண்டும் என்பதால், அவர்கள் மிகவும் ஒழுக்கமான வாழ்க்கை முறையை வாழ வேண்டியுள்ளது.

யாருக்கும் தெரியாத பைலட்களின் இன்னொரு பக்கம்... கை நிறைய சம்பாதித்தாலும் இவ்ளோ ரிஸ்க் இருக்கா?

இதற்காக நிறைய தியாகங்களையும் அவர்கள் செய்ய வேண்டியுள்ளது. அத்துடன் பைலட்களின் வேலையும் சவாலானதுதான். விமானத்தில் பயணம் செய்யும் அத்தனை பயணிகளையும் பாதுகாப்பாக கொண்டு சென்று சேர்க்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு உள்ளது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக முதலில் பைலட்டாக தேர்ச்சி பெறுவது என்பதே சவாலான விஷயமாகதான் இருக்கிறது.

யாருக்கும் தெரியாத பைலட்களின் இன்னொரு பக்கம்... கை நிறைய சம்பாதித்தாலும் இவ்ளோ ரிஸ்க் இருக்கா?

நீங்கள் பைலட் ஆக வேண்டுமென்றால், அதிக முதலீடு செய்ய வேண்டியிருக்கும். அதாவது படிப்பிற்கும், பயிற்சிகளுக்கும் மிகவும் அதிகமாக செலவு ஆகும். பைலட் பயிற்சி மிகவும் விலை உயர்ந்தது. எனவே அனைவராலும் இப்படி பெரிய தொகையை முதலீடு செய்ய முடியாது. இந்த பொருளாதார நெருக்கடி பிரச்னையை கடந்துதான் பைலட்கள் வருகிறார்கள்.

யாருக்கும் தெரியாத பைலட்களின் இன்னொரு பக்கம்... கை நிறைய சம்பாதித்தாலும் இவ்ளோ ரிஸ்க் இருக்கா?

மேலும் இன்றைய நவீன உலகில் அனைத்தும் ‘ஆட்டோமேட்டிக்’ ஆகி வருகிறது. இதற்கு விமான போக்குவரத்து துறையும் விதிவிலக்கு அல்ல. டிரைவர் இல்லாமல் இயங்கும் கார்களால் டிரைவர்களின் வேலை வாய்ப்பு குறையலாம் என்ற அச்சம் உள்ள அதே சூழலில், ‘ஆட்டோமேஷன்’ காரணமாக விமான போக்குவரத்து துறையிலும் வேலை இழப்புகள் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது.

Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube