உச்ச நடிகர் பயன்படுத்திய சொகுசு கார்… காரோட விலையை கேட்டீங்க மயக்கமே வந்திடும்! நாம நினைக்கிறதவிட அதிகம்!

பாலிவுட் திரையுலகில் அதிக செல்வாக்குமிக்கவர்களில் ஷாருக் கானும் ஒருவர். இவரிடத்தில் தற்போது எண்ணற்ற சொகுசு கார்கள் பயன்பாட்டில் உள்ளன. ஆனால், அவர் முதலில் வாங்கிய கார் மாருதி சுஸுகி ஆம்னி (Maruti Suzuki Omni) ஆகும். இந்த காரையே பல வருடங்களாக அவர் பயன்படுத்தினார். இந்த காரில் சொகுசு வசதிகள் என்பது மிக மிக குறைவே.

உச்ச நடிகர் பயன்படுத்திய சொகுசு கார்... காரோட விலையை கேட்டீங்க மயக்கமே வந்திடும்! நாம நினைக்கிறதவிட அதிகம்!

அதேநேரத்தில் தற்போது அவர் பயன்படுத்தும் வாகனகள் சில உல்லாச கப்பல்களையே மிஞ்சும் வகையில் அதிக சொகுசு வசதிகள் கொண்ட வாகனங்களாக உள்ளன. அத்தகைய ஓர் காரிலேயே ஷாருக் பயணித்த வீடியோக் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) இன் உலக புகழ்பெற்ற மாடல்களில் ஒன்றான எஸ்-கிளாஸ் (S-Class) காரிலேயே ஷாருக் கான் பயணத்தை மேற்கொண்டிருக்கின்றார்.

உச்ச நடிகர் பயன்படுத்திய சொகுசு கார்... காரோட விலையை கேட்டீங்க மயக்கமே வந்திடும்! நாம நினைக்கிறதவிட அதிகம்!

இந்த கார் மாடல் இந்தியாவில் எஸ் 350 டி 4 மேட்டிக் (S 350d 4MATIC) மற்றும் எஸ் 450 4 மேட்டிக் (S 450 4MATIC) ஆகிய தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதில், எஸ் 350 டி 4 மேட்டிக் தேர்விலேயே ஷாருக் பயணித்திருக்கின்றார். இதன் விலை இந்தியாவில் ரூ. 1.59 கோடி ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

உச்ச நடிகர் பயன்படுத்திய சொகுசு கார்... காரோட விலையை கேட்டீங்க மயக்கமே வந்திடும்! நாம நினைக்கிறதவிட அதிகம்!

3.0 லிட்டர், 6 சிலிண்டர் டீசல் மோட்டாரே சொகுசு காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 286 எச்பி பவர் மற்றும் 600 என்எம் டார்க்கை திறனை வெளியேற்றும். ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இந்த வாகனம் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிமீ ஆகும். அதேநேரத்தில், பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை வெறும் 6.4 செகண்டுகளிலேயே தொட்டுவிடும்.

உச்ச நடிகர் பயன்படுத்திய சொகுசு கார்... காரோட விலையை கேட்டீங்க மயக்கமே வந்திடும்! நாம நினைக்கிறதவிட அதிகம்!

எஸ் கிளாஸ் மாடலில் கிடைக்கும் மற்றொரு தேர்வான எஸ் 450டி வேரியண்டில் 3.0 லிட்டர், 6 சிலிண்டர் பெட்ரோல் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டாருடன் சேர்த்து 48 வோல்ட் ஹைபிரிட் தொழில்நுட்பமும் வழங்கப்பட்டுள்ளது. இதில், ஹைபிரிட் தொழில்நுட்பம் 22 எச்பி பவரையும், பெட்ரோல் மோட்டார் 367 எச்பி பவரையும் வெளியேற்றுகின்றன.

உச்ச நடிகர் பயன்படுத்திய சொகுசு கார்... காரோட விலையை கேட்டீங்க மயக்கமே வந்திடும்! நாம நினைக்கிறதவிட அதிகம்!

இந்த வேரியண்டின் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிமீ ஆகும். இது பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்ட வெறும் 5.1 செகண்டையே எடுத்துக் கொள்ளும். பிரீமியம் அம்சங்களாக இக்காரில் ஃப்ளஷ் ரக டூர் ஹேண்டில்கள், பனோரமிக் சன்ரூஃப், சாவியில்லாமல் நுழையும் வசதி, அலாய் வீல்கள், எல்இடி தர லைட்டுகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

இத்துடன், மெர்சிடிஸ் பென்ஸின் லேட்டஸ்ட் எம்பியூஎக்ஸ் சிஸ்டமும் எஸ்-கிளாஸில் வழங்கப்பட்டுள்ளது. இக்காரில் இன்ஃபோடெயின்மென்ட் செங்குத்தாக டேஷ்போர்டின் மையப் பகுதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இத்துடன், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், நப்பா லெதர், ரெக்லைன் ஃபங்க்சன் உள்ளிட்ட அம்சங்களும் எஸ் கிளாஸில் கொடுக்கப்பட்டுள்ளன.

உச்ச நடிகர் பயன்படுத்திய சொகுசு கார்... காரோட விலையை கேட்டீங்க மயக்கமே வந்திடும்! நாம நினைக்கிறதவிட அதிகம்!

மேலும், கூடுதல் சிறப்பம்சங்களாக பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல், யுஎஸ்பி சார்ஜிங் ஃபோர்ட், 64 வண்ண ஆம்பியன்ட் மின் விளக்கு, இலுமினேட்டட் டூர் சில், ரிமோட் பூட் லைட், டபுள் சன் பிளைண்ட்ஸ், ஹேண்ட் ஃப்ரீ டெயில்கேட், சாஃப்ச் குளோஸ் டூர்கள் ஆகிய வழங்கப்பட்டுள்ளன.

உச்ச நடிகர் பயன்படுத்திய சொகுசு கார்... காரோட விலையை கேட்டீங்க மயக்கமே வந்திடும்! நாம நினைக்கிறதவிட அதிகம்!

இதேபோல் பாதுகாப்பு விஷயத்திலும் இந்த கார் மிக சூப்பரானதாக காட்சியளிக்கின்றது. ஆக்டீவ் பார்கிங் அசிஸ்டன்ட், பெடஸ்ட்ரியன் புரடெக்சன், டிஜிட்டல் லைட் டெக்னாலஜி, 360 டிகிரி பார்க்கிங் கேமிரா, ஆக்டீவ் டிஸ்டன்ஸ் அசிஸ்டன்ட் டிஸ்ட்ரானிக், ஆக்டீவ் லேன் கீப் அசிஸ்ட், டயர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன. இத்தகைய சூப்பரான அம்சங்கள் கொண்ட எஸ்-கிளாஸ் காரிலேயே ஷாருக் கான் அண்மையில் காட்சி தந்தார். அப்போது, நடிகரைவிட இந்த காரே பலரின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது.

Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube