பிரதம மந்திரி வேலை வாய்ப்பு திட்டம் நீட்டிப்பு: 40 லட்சம் வேலைகள் உருவாகும்


PMEGP என்று கூறப்படும் பிரதம மந்திரி வேலைவாய்ப்புத் திட்டம் தற்போது மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வேலையில்லாத இளைஞர்களுக்கு நாடு முழுவதும், விவசாயம் அல்லது குறு நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும். இந்தத் திட்டம் தற்போது 2021-22 முதல் 2025-26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், தங்கள் புதிய திட்டங்களுக்கு அனுமதி பெறலாம், PMEGP ஸ்கீமில் விண்ணப்பிக்கலாம்.

இந்த வேலைவாய்ப்பு திட்டம் 2008-09 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டம் தொடங்கியதில் இருந்து, கிட்டத்தட்ட 7.8 லட்சம் குறு நிறுவனங்களுக்கு ரூ.19,995 கோடி கடனை மானியத்துடன் வழங்கப்பட்டு 64 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளது. நிதியுதவி பெறும் குறு நிறுவனங்களில் சுமார் 80 சதவீதம் கிராமப்புறங்களில் உள்ளன மற்றும் 50 சதவீத நிறுவனங்கள் பட்டியல் இனத்தவர்கள் (SC), பழங்குடியினர் (ST) மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

PMEGP திட்டத்தில் திருநங்கைகளும் விண்ணப்பிக்கலாம். திருநங்கைகள், சிறப்பு வகை விண்ணப்பதாரர்களாகக் கருதப்படுகிறார்கள். இவர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் கூடுதல் மானியமும் வழங்கப்படுகிறது.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம், ஏற்கனவே கிட்டத்தட்ட 20 ஆயிரம் கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளது, தற்போது மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட திட்டத்தில் 13,554.42 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்த ஐந்து ஆண்டுகளில், கிட்டத்தட்ட 40 லட்சம் நபர்களுக்கு, நிலையான வேலை வாய்ப்புகளை இந்த திட்டத்தின் மூலம் உருவாக்கலாம் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இரண்டுமே இந்த பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமில்லாமல், இந்த வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. உற்பத்தியில் ஈடுபடும் யூனிட்டுகளுக்கு அதிகபட்ச கடன் தொகை 25 லட்சத்தில் இருந்து 50 லட்ச ரூபாயாக உயர்ந்துள்ளது. சேவை யூனிட்டுகளுக்கு 10 லட்சத்தில் இருந்து 20 லட்ச ரூபாயாக அதிகரித்துள்ளது.

PMEGP திட்டத்தில், கிராமம் மற்றும் நகரம் என்ற கடன் வழங்கப்படும் வரையறை அமைக்கப்பட்டுள்ளது. பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்துப் பகுதிகளும் கிராமப் பகுதிகளாகவும், நகராட்சியின் வரம்பில் பட்டியலிடப்பட்டுள்ள பகுதிகள் நகர்ப்புறங்களாகக் கருதப்படும்.

ஒதுக்கப்பட்ட கடன் தொகையில் 25 சதவீதம் நகர்புற நிறுவனங்களுக்கும், 35 சதவீத கிராமப்புற திட்டங்களுக்கும், மற்றவர்களுக்கு 40 சதவீதம், பெண்கள், பழங்குடியினர், உள்ளிட்ட பிற பிரிவினர் பிரித்து வழங்கப்படும்.

மேலும் பார்க்க… டிஆர்டிஒ உயர் ஆற்றல் மையத்தில் 25 காலியிடங்கள்: பொறியியல் பட்டதாரிகள்

தேசிய அளவில் நோடல் ஏஜென்சியாக வரும் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தால் (KVIC) இந்த வேலைவாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மற்றும், மாநில அளவில், அந்தந்த மாநிலத்தின் KVIC இயக்குநரகங்கள், மாநில காதி மற்றும் கிராமத் தொழில் வாரியங்கள் (KVIBs), மாவட்ட தொழில் மையங்கள் (DICகள்) மற்றும் வங்கிகள் ஆகியவை செயல்படுத்தப்படுகின்றன.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.



Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube