ஜெயம் ரவி பிரியா பவானி சங்கர் நடிக்கும் அகிலன் படத்தின் டீசர் வெளியானது


நடிகர் ஜெயம் ரவி நடித்த ‘அகிலன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்பப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது

கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையில், விவேக் ஆனந்த் ஒளிப்பதிவில், கணேஷ்குமார் படத்தொகுப்பில் உருவான இந்த படத்தின் டீசர் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

agilan trailer10062022m2

முழுக்க முழுக்க ஹார்பரில் நடைபெறும் அதிரடி ஆக்ஷன் படமான இந்த படத்தில் ஒட்டுமொத்த ஹார்பரையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் கேரக்டரில் ஜெயம் ரவி நடித்திருக்கிறார். பிரியா பவானி சங்கர் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார்

agilan trailer10062022m3

இந்த டீசரில் கடைசியாக ‘கடலில் இருந்து உப்பை கூட பிரித்து விடலாம், ஆனால் ஹார்பரில் இருந்து அகிலனை பிரிக்க முடியாது என்று ஜெயம் ரவி பேசும் மாஸ் வசனத்துடன் டீசர் முடிவுக்கு வந்தது. இந்த படம் செப்டம்பர் 15ம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக இந்த டீசரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

agilan trailer10062022m





Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube