சிவகார்த்திகேயன் நடிக்கும் இருபதாவது படத்தின் தலைப்பு பர்ஸ்ட் லுக் உடன் நாளை வெளியாகிறது


சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் இருபதாவது படத்தின் தலைப்பு நாளை முதல் பார்வையுடன் வெளியாகிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் ஆகிய இரண்டு திரைப்படங்களும் உலக அளவில் 100 கோடி ரூபாயை கடந்து சாதனை படைத்துள்ளது. இதில் சமீபத்தில் வந்த டான் திரைப்படம் 125 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 20வது படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஆனால் இந்த திரைப்படத்திற்கு இதுவரை தலைப்பு அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் நாளை அதற்கான தலைப்பு மற்றும் முதல்பார்வை வெளியிடுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்த திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்குகிறார். இதனால் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகிறது.

மேலும் இந்த திரைப்படத்தை விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தில் உக்ரைன் நாட்டின் நடிகை மரியா நாயகியாக நடிக்கிறார்.

இதையும் படியுங்கள்… லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் சூப்பர் ஹிட் படங்கள் ஒரு லிஸ்ட்!

மேலும் எஸ்.தமன் இசை அமைக்கிறார் சிவகார்த்திகேயன் நடித்த இந்த படத்திற்கும் தமன் இசையமைக்கவில்லை. முதன்முறையாக இந்த திரைப்படத்திற்கு அவர் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

@ Google செய்திகளைப் பின்தொடரவும்: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.



Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube