மாநாடு, டான் என எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வெளிவந்துள்ள படங்கள் பிரம்மாண்ட வெற்றியை பெற்று வருகின்றன. அவர் தான் ஹீரோவாக நடிப்பதற்கு முக்கியத்துவம் அளிப்பதாக கூறி வரும் நிலையில், வில்லனாக அவர் நடிக்கும் படங்கள் மெகா ஹிட்டாகின்றன.
இந்நிலையில் எஸ்.ஜே. சூர்யா ஹீரோவாக நடித்திருக்கும் பொம்மை படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.
சிறிய முதலீட்டில் மாபெரும் வசூல்… 300 சதவீதம் லாபம் சம்பாதித்த காத்து வாக்குல ரெண்டு காதல்
மொழி, அபியும் நானும் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ராதா மோகன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா பொம்மை படத்திற்கு இசையமைத்துள்ளார். தரமான டெக்னிஷியன்ஸ் பொம்மை படத்தில் இணைந்துள்ளதால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இந்தப் படம்.
BOMMAI டிரெய்லர் இங்கே ❤️
இணைப்பு https://t.co/5iLPb84Njq#பொம்மை #பொம்மை டிரெய்லர்@iam_SJSuryah @ராதாமோகன்_திரு @thisisysr
@லாம் சாந்தினி@ரிச்சர்ட்மநாதன் @editorantony
@KKadhirrartdir @கண்ணன்_கனல் @மதன்கார்க்கி pic.twitter.com/Y3kBoQffL4— பிரியா பவானி சங்கர் (@priya_Bshankar) ஜூன் 1, 2022
இந்நிலையில் பொம்மை படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது.
டிரெய்லரைப் பார்க்க…
பொம்மை படத்திற்கு ஒளிப்பதிவு ரிச்சர்ட் எம் நாதன், பாடல்கள் கார்க்கி, எடிட்டிங் ஆண்டனி, கதை பொன் பார்த்திபன், கலை கே. கதிர், ஸ்டாண்ட் மாஸ்டராக கனல் கண்ணன் ஆகியோர் பணியாற்றினர்.
ஏஞ்சல் ஸ்டூடியோஸ் சார்பாக மருதுபாண்டியன், ஜாஸ்மின் சந்தோஷ், தீபா துரை ஆகியோர் பொம்மை படத்தை தயாரித்துள்ளனர்.
12 மில்லியன் சப்ஸ்க்ரைபர்களைக் கொண்ட திங்க் மியூசிக் இந்தியா யூடியூப் சேனலில் பொம்மை படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.