இவைதான் இந்தியாவின் டாப் 10 எஸ்யூவி கார்கள்… 2022 மே மாதத்தில் அதிகம் விற்பனையாகிய எஸ்யூவி கார்கள்!

இந்தியாவில் எஸ்யூவி ரக கார்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனை உறுதிப்படுத்தும் கடந்த 2022 மே மாதத்தில் குறிப்பிட்ட 10 எஸ்யூவி ரக கார் மாடல்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துள்ளது. அவைகுறித்த கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இவைதான் இந்தியாவின் டாப் 10 எஸ்யூவி கார்கள்... 2022 மே மாதத்தில் அதிகம் விற்பனையாகிய எஸ்யூவி கார்கள்!

டாடா மோட்டார்ஸின் நெக்ஸான் காருக்கு சமீபகாலமாக வரவேற்பு அதிகரித்துக் காணப்படுகின்றது. இதன் விளைவாக இந்தியாவின் மிக அதிகம் விற்பனையாகும் காராக அது மாறியிருக்கின்றது. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் ஹூண்டாய் நிறுவனத்தின் க்ரெட்டாவையே அது பின்னுக்கு தள்ளியிருக்கின்றது.

இவைதான் இந்தியாவின் டாப் 10 எஸ்யூவி கார்கள்... 2022 மே மாதத்தில் அதிகம் விற்பனையாகிய எஸ்யூவி கார்கள்!

ஒட்டுமொத்தமாக 14,614 யூனிட்டு நெக்ஸான் கார் மாடல்கள் விற்பனையாகியிருக்கின்றது. டாடா நெக்ஸான் ஓர் காம்பேக்ட் எஸ்யூவி ரக காராகும். இதே வாகனம் கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதத்தில் 6,439 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகி இருந்தன. இந்த எண்ணிக்கையுடன் 2022 மே மாதத்தை ஒப்பிட்டு பார்க்கையில் 127 சதவீதம் எஸ்யூவி கார்கள் வளர்ச்சியடைந்திருப்பது தெரிய வந்திருக்கின்றது.

இவைதான் இந்தியாவின் டாப் 10 எஸ்யூவி கார்கள்... 2022 மே மாதத்தில் அதிகம் விற்பனையாகிய எஸ்யூவி கார்கள்!

இரண்டாம் இடத்தை ஹூண்டாய க்ரெட்டா எஸ்யூவி கார் பிடித்திருக்கின்றது. இந்த வாகனம் 10,973 யூனிட்டுகள் வரை கடந்த மே மாதத்தில் விற்பனையாகியிருக்கின்றன. இதே வாகனம் 2021 மே மாதத்தில் வெறும் 7,527 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகியிருந்தன. இது 46 சதவீத விற்பனை வளர்ச்சியாகும்.

இவைதான் இந்தியாவின் டாப் 10 எஸ்யூவி கார்கள்... 2022 மே மாதத்தில் அதிகம் விற்பனையாகிய எஸ்யூவி கார்கள்!

இது ஓர் மிட்சைஸ் எஸ்யூவி ரக காராகும். இந்த காருக்கு வெகு நாட்களாகவே இந்தியாவில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. எனவேதான் இக்காரை மிட்-சைஸ் எஸ்யூவி கார் பிரிவின் தலைவன் என்று அழைக்கின்றனர். இந்த தகுதியை தொடர்ச்சியாக தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக கூடிய விரைவில் இக்காரின் அப்டேடட் வெர்ஷன் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது.

இவைதான் இந்தியாவின் டாப் 10 எஸ்யூவி கார்கள்... 2022 மே மாதத்தில் அதிகம் விற்பனையாகிய எஸ்யூவி கார்கள்!

ஹூண்டாய் க்ரெட்டா காருக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் மாருதி சுஸுகியின் விட்டாரா ப்ரெஸ்ஸா உள்ளது. இக்காரின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனும் வெகு விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வர இருக்கின்றது. இந்த கார் 2022 மே மாதத்தில் 10,312 யூனிட்டுகள் வரை விற்பனையாகியிருக்கின்றன. இது 289 வளர்ச்சி ஆகும். 2021 மே மாதத்தில் இதே கார் மாடல் வெறும் 2,648 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகின.

இவைதான் இந்தியாவின் டாப் 10 எஸ்யூவி கார்கள்... 2022 மே மாதத்தில் அதிகம் விற்பனையாகிய எஸ்யூவி கார்கள்!

இது ஓர் சப்-மீட்டர் எஸ்யூவி ரக காராகும். இக்காரின் அப்டேட் வெர்ஷன் ஜூன் 30ம் தேதி அன்றைக்கு அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த காருக்கு அடுத்தபடியாக டாடாவின் மற்றுமொரு தயாரிப்பான பஞ்ச் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவின் அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்ட மலிவு விலை வாகனம் இதுவாகும்.

இவைதான் இந்தியாவின் டாப் 10 எஸ்யூவி கார்கள்... 2022 மே மாதத்தில் அதிகம் விற்பனையாகிய எஸ்யூவி கார்கள்!

இந்த வாகனம் 2022 மே மாதத்தில் 10,241 யூனிட் வரை விற்பனையாகியிருக்கின்றது. இது விற்பனைக்கு வந்து சந்திக்கும் முதல் மே மாதம் இதுவே ஆகும். இந்த நிலையிலேயே மிக சிறப்பான விற்பனை வளர்ச்சியை அது சந்தித்துள்ளது. இந்த காருக்கு அடுத்தபடியாக ஹூண்டாய் வென்யூ இருக்கின்றது. இந்த கார் மாடல் 71 சதவீத விற்பனை வளர்ச்சியை பெற்றிருக்கின்றது.

இவைதான் இந்தியாவின் டாப் 10 எஸ்யூவி கார்கள்... 2022 மே மாதத்தில் அதிகம் விற்பனையாகிய எஸ்யூவி கார்கள்!

8300 யூனிட்டுகள் வென்யூ கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. இந்த விற்பனை எண்ணிக்கையின் காரணத்தினால் நாட்டில் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் வென்யூ ஐந்தாவது பிடித்துள்ளது. 2021 மே மாதத்தில் 4,840 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகியிருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது.

இவைதான் இந்தியாவின் டாப் 10 எஸ்யூவி கார்கள்... 2022 மே மாதத்தில் அதிகம் விற்பனையாகிய எஸ்யூவி கார்கள்!

இதைத் தொடர்ந்து ஆறாவது இடத்தில் கியா சொனெட் உள்ளது. இந்த கார் மாடல் 7,899 யூனிட்டுகள் விற்பனையுடன் இந்த இடத்தைப் பிடித்துள்ளது. முந்தைய 2021 ஆம் ஆண்டின் மே மாதத்தில் இந்த வாகனம் 6627 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகியிருந்த. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே கணிசமான விற்பனை வளர்ச்சியை அது பெற்றிருக்கின்றது.

இவைதான் இந்தியாவின் டாப் 10 எஸ்யூவி கார்கள்... 2022 மே மாதத்தில் அதிகம் விற்பனையாகிய எஸ்யூவி கார்கள்!

அதற்கு அடுத்ததாக கியா செல்டோஸ் ஏழாவது இடத்தையும், எட்டு, ஒன்பது மற்றும் பத்து ஆகிய இடங்களை மஹிந்திரா நிறுவனத்தின் தயாரிப்புகளும் பிடித்துள்ளது. 5,953 யூனிட்டுகள் கியா செல்டோஸும், 5,069 யூனிட்டுகள் மஹிந்திரா எக்ஸ்யூவி700 5,022 யூனிட்டுகள் எக்ஸ்யூவி 300 மாடலும், 4,100 யூனிட்டுகள் தார் காரும் விற்பனையாகியிருக்கின்றன.

Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube