தனுஷை வைத்து சேகர் கம்முலா படத்தை இயக்குவார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் அந்த படம் குறித்து எந்த தகவலும் இல்லை.
உண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
சேகர் கம்முலா படம் டிராப்பா என்ற பேச்சு கிளம்பிய நிலையில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தனுஷ் படத்தை பான் இந்திய படமாக எடுக்க விரும்புகிறாராம் சேகர் கம்முலா.
கதை குறித்து ஐடியா இருந்தாலும் திரைக்கதை வேலையை இன்னும் முழுமையாக முடிக்கவில்லை. இதை அவர் தனுஷிடம் கூறியிருக்கிறார். அதற்கு தனுஷோ, பரவாயில்லை, எவ்வளவு நேரமானாலும் திரைக்கதையை முடித்துவிட்டு வாங்க, படம் பண்ணலாம் என்றாராம்.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படமும் பான் இந்திய படமாக உருவாகிறது. இதை தவிர்த்து அல்லு அர்ஜுன் நடிக்கும் பான் இந்தியில் நடிக்க கமிட்டாகியிருக்கிறாராம் தனுஷ்.
இதற்கிடையே தனுஷ் நடித்திருக்கும் தி கிரே மேன் ஹாலிவுட் படம் ஜூலை 22ம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகவிருக்கிறது. இதையடுத்து தனுஷை ஹீரோவாக வைத்து புது படம் இயக்க முடிவு செய்திருப்பதாக ருசோ சகோதரர்கள் பதிவு செய்துள்ளார்.