TN வேலை செய்திகள் | டிகிரி படித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலை … ரூ.65,000/- சம்பளம்


திறன்மிகு இளைஞர்களின் திறன்களை பயன்படுத்தி நிர்வாக செயல்முறைகள் மற்றும் சேவை வழங்கலின் செயல் திறனை மேம்படுத்துதல் முக்கியத் துவம் வாய்ந்த தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வு திட்டம் – 2022 – 24 என்ற திட்டத்திற்கு கீழ்கண்ட விவரங்களின் படி தகுதியுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த திட்டத்திற்காக நடப்பாண்டில் 30 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி பெற இளைஞர்கள் http://www.bim.edu/Tncmpf எனும் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி ஜூன் 10 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைக்கான விவரங்கள்:

எத்தனை நபர்கள் வேலைக்கு எடுக்கப்படுகிறார்கள் 30
பணி காலம் 2 ஆண்டுகள்
சம்பள விவரம் ரூ.65,000 + ரூ.10,000 (கூடுதல் கொடுப்பனவு)
வயது

22-30 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

BC/MBC – 33 வயதுக்குள் இருக்க வேண்டும்.

SC/ST – 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம் / பல்கலைக்கழகம் / கல்லூரிகளில் பொறியியல், மருத்துவம், சட்டம், வேளாண்மை, கால்நடை மருத்துவ அறிவியல் பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் முதுகலைப் பட்டம் முடித்திருந்தால் கூடுதல் சிறப்பாக.

தமிழ் மொழி பயன்பாட்டுத் திறன் கட்டாயமானது.

தேர்வு செய்யப்படும் முறை எழுத்துத் தேர்வு, மற்றும் நேர்முகத் தேர்வு, கணினி அடிப்படையிலான தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.
பணியிடம் தேர்வு செய்யப்படும் நபர்கள் சென்னையில் அமர்த்தப்படுவர்
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 25/05/2022
விண்ணப்பிக்க கடைசி தேதி 10/06/2022

இதற்கு 25/05/2022 முதலில் விண்ணப்பிக்கலாம் மற்றும் இணைய வழியில் விண்ணப்பம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 10/06/2022 நாளையே கடைசி நாள். இதற்கான விண்ணப்ப கட்டணம் ஏதும் இல்லை.

வெளியிட்டவர்:சங்கரவடிவு ஜி

முதலில் வெளியிடப்பட்டது:

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.



Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube