மார்ச் 30ஆம் தேதி முதல் ஏப்ரல் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. 7,301 பணியிடங்களுக்கு நடைபெறவுள்ள இந்த தேர்வுக்கு நேற்று நள்ளிரவு வரை மொத்தம் 21,83,225 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கு 16 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் இந்த ஆண்டு குரூப் 4 தேர்வுக்கு கூடுதலாக 5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
கொரொனோ காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக குரூப்-4 தேர்வு நடத்தப்படவில்லை இதன் காரணமாக இந்த ஆண்டு தேர்வு எழுதக்கூடிய நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அந்தவகையில் 7,301 பணியிடங்களுக்கு ஒரு பணியிடத்திற்கு 290 நபர்கள் போட்டியிடுகின்றனர்.
டி.என்.பி.எஸ்.சி.
Must Read : தீண்டாமையை கடைபிடிக்காமல் சாதித்த மதுரை கொடிக்குளம் கிராமம் – ஆட்சியர் அளித்த ஆச்சர்ய பரிசுகள்..
குரூப்-4 தேர்வில் 200 கேள்விகள் கேட்கப்பட்டு 300 மதிப்பெண்களுக்கு மதிப்பீடு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.