ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு விண்ணப்பிக்க இன்று கடைசி | JEE Exam


Last Updated : 25 Apr, 2022 07:14 AM

Published : 25 Apr 2022 07:14 AM
Last Updated : 25 Apr 2022 07:14 AM

சென்னை: மத்திய உயர்கல்வி நிறுவனங்களான ஐஐஐடி, என்ஐடி, ஐஐடி-களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும்.

இவை ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு, பிரதானத் தேர்வு என 2 கட்டமாக தேசிய தேர்வு முகமை (என்டிஏ) சார்பில் நடைபெறும். இதில் முதல்நிலைத் தேர்வு நடப்பாண்டு முதல் வருடத்துக்கு 2 முறை நடத்தப்படும் என்று என்டிஏ அறிவித்திருந்தது.

அதன்படி ஜேஇஇ முதல்நிலை முதல்கட்ட தேர்வு ஜூன் 20 முதல்29-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தேர்வுக்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த மார்ச் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது விண்ணப்பிக்கும் காலஅவகாசம் இன்று இரவு 9 மணியுடன் (ஏப்ரல் 25) நிறைவு பெறுகிறது.

தேர்வு ஜூன் மாதம் தள்ளிவைப்பு

எனவே, மாணவர்கள் /jeemain.nta.nic.in/ என்ற இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். விரிவான தேர்வுக்கால அட்டவணை உட்பட கூடுதல் விவரங்களை https://nta.ac.in/ என்ற இணையதளத்தில் அறியலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது. இதற்கிடையே ஏப்ரலில் நடைபெறவிருந்த ஜேஇஇ முதல்நிலைத் தேர்வை மாணவர்கள் நலன்கருதி ஜூன் மாதத்துக்கு என்டிஏஒத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube