மே மாதத்தின் டாப்-10 கார்கள்… மாருதி வேகன் ஆர் முதலிடம்… டாடா நெக்ஸான் எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?

இந்திய சந்தையில் நடப்பாண்டு மே மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், மாருதி சுஸுகி வேகன் ஆர் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் வெறும் 2,086 ஆக இருந்த மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் விற்பனை எண்ணிக்கை, நடப்பாண்டு மே மாதம் 16,814 ஆக உயர்ந்துள்ளது. இது 706 சதவீத வளர்ச்சியாகும்.

மே மாதத்தின் டாப்-10 கார்கள்... மாருதி வேகன் ஆர் முதலிடம்... டாடா நெக்ஸான் எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?

மாருதி சுஸுகி நிறுவனம் வேகன் ஆர் காரின் புதிய மாடலை நடப்பாண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்த பட்டியலில் டாடா நெக்ஸான் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 6,439 ஆக இருந்த டாடா நெக்ஸான் காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு மே மாதம் 14,614 ஆக உயர்ந்துள்ளது. இது 127 சதவீத வளர்ச்சியாகும்.

மே மாதத்தின் டாப்-10 கார்கள்... மாருதி வேகன் ஆர் முதலிடம்... டாடா நெக்ஸான் எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?

இது குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை வாங்கிய முதல் மேட் இன் இந்தியா கார் என்ற பெருமைக்குரிய கார் ஆகும். டாடா நிறுவனம் சமீபத்தில் நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் மேக்ஸ் என்ற புதிய மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

மே மாதத்தின் டாப்-10 கார்கள்... மாருதி வேகன் ஆர் முதலிடம்... டாடா நெக்ஸான் எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?

இந்த பட்டியலில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் 3வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 7,005 ஆக இருந்த மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு மே மாதம் 14,133 ஆக உயர்ந்துள்ளது. இது 102 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் மாருதி சுஸுகி பலேனோ நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

மே மாதத்தின் டாப்-10 கார்கள்... மாருதி வேகன் ஆர் முதலிடம்... டாடா நெக்ஸான் எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?

கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் வெறும் 4,803 ஆக இருந்த பலேனோ காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு மே மாதம் 13,970 ஆக உயர்ந்துள்ளது. இது 191 சதவீத வளர்ச்சியாகும். மாருதி சுஸுகி பலேனோ காரின் 2022 மாடலையும் சமீபத்தில் அறிமுகம் செய்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்த பட்டியலில் மாருதி சுஸுகி ஆல்டோ ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் வெறும் 3,220 ஆக இருந்த மாருதி சுஸுகி ஆல்டோ காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு மே மாதம் 12,933 ஆக உயர்ந்துள்ளது. இது 302 சதவீத வளர்ச்சியாகும்.

மே மாதத்தின் டாப்-10 கார்கள்... மாருதி வேகன் ஆர் முதலிடம்... டாடா நெக்ஸான் எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?

இந்த பட்டியலில் மாருதி சுஸுகி எர்டிகா ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 2,964 எர்டிகா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பாண்டு மே மாதம் 12,226 ஆக உயர்ந்துள்ளது. இது 354 சதவீத வளர்ச்சியாகும். எர்டிகா காரின் 2022 மாடலையும் மாருதி சுஸுகி நிறுவனம் சமீபத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

மே மாதத்தின் டாப்-10 கார்கள்... மாருதி வேகன் ஆர் முதலிடம்... டாடா நெக்ஸான் எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?

இந்த பட்டியலில் மாருதி சுஸுகி டிசையர் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 5,819 டிசையர் கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்திருந்த நிலையில், அந்த எண்ணிக்கை நடப்பாண்டு மே மாதம் 11,603 ஆக உயர்ந்துள்ளது. இது 99 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் ஹூண்டாய் க்ரெட்டாவிற்கு எட்டாவது இடம் கிடைத்துள்ளது.

மே மாதத்தின் டாப்-10 கார்கள்... மாருதி வேகன் ஆர் முதலிடம்... டாடா நெக்ஸான் எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?

கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 7,527 க்ரெட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு மே மாதம் 10,973 ஆக உயர்ந்துள்ளது. இது 46 சதவீத வளர்ச்சியாகும். ஹூண்டாய் நிறுவனம் க்ரெட்டா காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது என்பது நாம் கவனிக்க வேண்டிய விஷயம் ஆகும்.

மே மாதத்தின் டாப்-10 கார்கள்... மாருதி வேகன் ஆர் முதலிடம்... டாடா நெக்ஸான் எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?

இந்த பட்டியலில் மாருதி சுஸுகி ஈக்கோ ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் வெறும் 1,096 ஆக மட்டுமே இருந்த ஈக்கோவின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு மே மாதம் 10,482 ஆக உயர்ந்துள்ளது. இது 856 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் பத்தாவது மற்றும் கடைசி இடத்தில் இருப்பது மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா ஆகும்.

மே மாதத்தின் டாப்-10 கார்கள்... மாருதி வேகன் ஆர் முதலிடம்... டாடா நெக்ஸான் எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?

கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் வெறும் 2,648 விட்டாரா பிரெஸ்ஸா கார்களை மட்டுமே மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்திருந்தது. அந்த எண்ணிக்கை நடப்பாண்டு மே மாதம் 10,312 ஆக உயர்ந்துள்ளது. இது 289 சதவீத வளர்ச்சியாகும். மாருதி சுஸுகி நிறுவனம் விட்டாரா பிரெஸ்ஸா காரின் புதிய தலைமுறை மாடலை நடப்பு ஜூன் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube