இந்தியாவின் டாப் 10 ஏழு இருக்கை கார்கள்… டாப் பிளேஸ்ல எந்த காரு இருக்கு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இந்தியாவில் அதிகம் இருக்கைகள் கொண்ட காருக்கு எப்பவுமே மவுசு அதிகம்தான். பெரிய குடும்பங்கள் மத்தியில் அவற்றிற்கு நல்ல வரவேற்பு நிலவிக் கொண்டிருக்கின்றது. எனவேதான் முன்னணி வாகன உற்பத்தியாளர்கள் இந்த பிரிவை தவறவிடாமல் குறைந்தபட்சம் ஓர் கார் மாடாலையாவது அதிக இருக்கைகள் கொண்ட வாகனமாக விற்பனைக்கு வழங்கி விடுகின்றன.

இந்தியாவின் டாப் 10 ஏழு இருக்கை கார்கள்... டாப் பிளேஸ்ல எந்த காரு இருக்கு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இந்தளவிற்கு மிக சிறப்பான வரவேற்பைப் பெறக் கூடியவையாக 7 இருக்கைகள் கொண்ட வாகனங்கள் உள்ளன. இவற்றில் அதிகம் விற்பனையாகக் கூடிய மாடல்கள் எவை என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்க உள்ளோம். கடந்த 2022 மே மாதத்தில் அதிகம் விற்பனையாகிய கார்களின் புள்ளி விபரங்களின் அடிப்படையில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் டாப் 10 ஏழு இருக்கை கார்கள்... டாப் பிளேஸ்ல எந்த காரு இருக்கு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 7 சீட்டர் காராக மாருதி சுஸுகியின் எர்டிகா இருக்கின்றது. வெகு நீண்ட நாட்களாகவே இந்த பிரிவில் முதல் இடத்தை எர்டிகா பிடித்திருக்கின்றது. இதேபோல், அதிகம் விற்பனையாகும் எம்பிவி கார்களின் பட்டியலிலும் இந்த வாகனமே முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தியாவின் டாப் 10 ஏழு இருக்கை கார்கள்... டாப் பிளேஸ்ல எந்த காரு இருக்கு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

ஒட்டுமொத்தமாக இந்த கார் மாடல் 12,226 யூனிட்டுகள் 2022 மாதத்தில் விற்பனையாகியிருக்கின்றன. இதே கார் மாடல் 2021 மே மாதத்தில் வெறும் 2,694 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகியிருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது. இதை விட 354 சதவீதம் அதிகமே இந்த மே மாதத்தில் கிடைத்திருக்கும் விற்பனையின் எண்ணிக்கை.

இந்தியாவின் டாப் 10 ஏழு இருக்கை கார்கள்... டாப் பிளேஸ்ல எந்த காரு இருக்கு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ வாகனம் இருக்கின்றது. இந்த வாகனம் 8,767 யூனிட்டுகள் விற்பனையைப் பெற்று இந்த இடத்தை அது பிடித்திருக்கின்றது. இதே வாகன மாடல் 2021 மே மாதத்தில் வெறும் 3,517 யூனிட்டுகளை மட்டுமே விற்பனையைப் பெற்றிருந்தது. இதைக்காட்டிலும் 2022 மே மாதத்தில் பெற்றிருப்பது 149 சதவீதம் அதிகம் விற்பனை ஆகும்.

இந்தியாவின் டாப் 10 ஏழு இருக்கை கார்கள்... டாப் பிளேஸ்ல எந்த காரு இருக்கு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

மூன்றாவது இடத்தில் மஹிந்திரா எக்ஸ்யூவி 700 இருக்கின்றது. ஒட்டுமொத்தமாக 5,059 யூனிட்டுகள் இந்த வாகனம் விற்பனையாகியிருக்கின்றது. இக்கார் விற்பனைக்கு சந்திக்கும் முதல் மே மாதம் இது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஐந்தாவது இடத்தை கியா கேரன்ஸ் பிடித்துள்ளது. இந்த வாகனம் கடந்த 2022 மே மாதத்தில் 4,612 யூனிட்டுகள் விற்பனையாகியிருக்கின்றன. விற்பனைக்கு சில மாதங்களே ஆகின்ற நிலையில் இந்த 7 சீட்டர் நான்காவது இடத்தைப் பிடித்திருப்பது ஒட்டுமொத்த இந்திய வாகன சந்தைக்கு பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்தியாவின் டாப் 10 ஏழு இருக்கை கார்கள்... டாப் பிளேஸ்ல எந்த காரு இருக்கு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இதற்கு அடுத்ததாக ஐந்தாவது இடத்தை மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 பிடித்துள்ளது. அந்த வாகனம் 2021 மே மாதத்தைக் காட்டிலும் 422 சதவீதம் அதிக விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது. அதாவது, 2021 மே மாதத்தில் வெறும் 782 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகியிருந்தநிலையில், 2022 மே மாதத்தில் சுமார் 4,085 யூனிட்டுகள் விற்பனையாகியிருக்கின்றன. இது அக்காருக்கு இந்தியாவில் கிடைத்திருக்கும் மிக சூப்பரான விற்பனை வளர்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இந்தியாவின் டாப் 10 ஏழு இருக்கை கார்கள்... டாப் பிளேஸ்ல எந்த காரு இருக்கு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

மாருதி சுஸுகி நிறுவனம் மிக சமீபத்திலேயே எக்ஸ்எல்6 மற்றும் எர்டிகாவின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷன்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தகுந்தது. ஆறாவது இடத்தை மஹிந்திராவின் ஸ்கார்பியோ பிடித்துள்ளது. இக்காரின் விற்பனையும் பல மடங்கு அதிக வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. 144 சதவீதம் விற்பனை வளர்ச்சியுடனேயே இந்த இடத்தை அது பிடித்துள்ளது. அதாவது, 2021 மே மாதத்தில் 1,782 மஹிந்திரா ஸ்கார்பியோ கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தநிலையில், 2022 மே மாதத்தில் அதே வாகனம் 4,348 யூனிட்டுகள் வரை விற்பனையாகியிருக்கின்றன.

இந்தியாவின் டாப் 10 ஏழு இருக்கை கார்கள்... டாப் பிளேஸ்ல எந்த காரு இருக்கு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இக்காருக்கு அடுத்தபடியாக அதிகம் விற்பனையாகிய 7 இருக்கைகள் கொண்ட கார்களின் பட்டியலில் ஏழாவது இடைத்தை டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா பிடித்திருக்கின்றது. இந்த வாகனமும் மிகப் பெரிய விற்பனை வளர்ச்சியை 2022 மே மாதத்தில் பெற்றிருக்கின்றது. 2021 மே-வில் வெறும் 20 யூனிட்டுகள் மட்டுமே அது விற்பனையாகியிருந்தநிலையில், 2022 மே-வில் 2,737 யூனிட்டுகள் வரை அது விற்பனையாகியிருக்கின்றது.

இந்தியாவின் டாப் 10 ஏழு இருக்கை கார்கள்... டாப் பிளேஸ்ல எந்த காரு இருக்கு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இந்த கார் மாடல்களைத் தொடர்ந்து எட்டாவது இடத்தில் டாடா சஃபாரியும், 9வது இடத்தில் ரெனால்ட் ட்ரைபரும், 10வது இடத்தில் ஹூண்டாய் அல்கஸார் உள்ளன. சஃபாரி 2,242 யூனிட்டுகளும், ட்ரைபர் 2,110 யூனிட்டுகளும், அல்கஸார் 1,947 யூனிட்டுகளும் விற்பனையாகியுள்ளன.

இந்தியாவின் டாப் 10 ஏழு இருக்கை கார்கள்... டாப் பிளேஸ்ல எந்த காரு இருக்கு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

மேலே பார்த்த விபரங்களை பட்டியலாகக் கீழே பார்க்கலாம்.

Rank Model May’22 May’21 Growth (%) YoY
1 Maruti Ertiga 12,226 2,694 354
2 Mahindra Bolero 8,767 3,517 149
3 Mahindra XUV700 5,069
4 Kia Carens 4,612
5 Maruti XL6 4,085 782 422
6 Mahindra Scorpio 4,348 1,782 144
7 Toyota Innova Crysta 2,737 20
8 Tata Safari 2,242 1,536 46
9 Renault Triber 2,110 524 303
10 Hyundai Alcazar 1,947 1,360 43

Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube