Traffic policeman Satish arrested for assaulting Swiggy delivery person in Coimbatore


கோவையில் ஸ்விகி ஊழியரை தாக்கிய போக்குவரத்து காவலர் சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை சின்னியம்பாளையத்தைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம் (38). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக உணவக விநியோகம் செய்யும் ஸ்விகி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் இன்று வழக்கம்போல், உணவகம் ஒன்றில் இருந்து உணவு ஆர்டர் எடுத்துக் கொண்டு, மோகனசுந்தரம் சென்று கொண்டிருந்தார். அப்போது, பீளமேடு காவல் நிலையம் அருகே அவர் சென்றேபோது, அவ்வழியாக வேகமாக வந்த தனியார் பள்ளி வேன், ஒரு பெண் மீது மோதி நிற்காமல் சென்றது.

இதைப் பார்த்த மோகனசுந்தரம், பள்ளி வேனை தடுத்து நிறுத்தி ஓட்டுநரிடம் “ஏன் அலட்சியமாக வேனை ஓட்டுகிறீர்கள்” என கேட்டுள்ளார். இதனால் அந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் நின்றது.

அப்போது, சிக்னலில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர் சதீஷ், என்ன நடந்தது என விசாரிக்காமல், சம்பவ இடத்துக்கு வந்து, உணவு விநியோக ஊழியர் மோகனசுந்தரத்தின் செல்போனை பிடுங்கி, அவரை சரமாரியாக கன்னத்தில் அறைந்தார்.

இதைப் பார்த்த அதிர்ச்சியடைந்த அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், போக்குவரத்து காவலர் அடிப்பதை வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டார்.

பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட காவலர் சதீஷை கட்டுப்பாட்டு அறைக்கு பணியிடம் மாற்றி உத்தரவிட்டார். தொடர்ந்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கோவையில் ஸ்விகி ஊழியரை தாக்கிய போக்குவரத்து காவலர் சதீஷ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக கோவை மாநகரக் காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 03.06.2022ம்‌ தேதி மாலை 05.45 மணியளலில்‌, கோவை சிங்காநல்லூர்‌ போக்குவரத்து காவல்‌ நிலைய காவலர்‌ 2846 சதீஸ்‌ என்பவர்‌ E2 பீளமேடு காவல்‌ நிலைய எல்லைக்குட்பட்ட ஃபன்‌ மால்‌ அருகே உள்ள போக்குவரத்து சிக்னலில்‌ பணியில்‌ இருந்துள்ளார்‌.

அப்போது மேற்படி போக்குவரத்து சிக்னலில்‌ இருந்து சென்ற தனியார்‌ பள்ளி வாகனம்‌ ஒன்று ரோட்டில்‌ குறுக்கே வந்த ஒரு பெண்ணை இடித்து விட்டு நிற்காமல்‌ சென்றுள்ளது. அப்பள்ளி வாகனத்தை சிக்னல்‌ அருகே சின்னியம்பாளையத்தை சேர்ந்த ஸ்விகி நிறுவனத்தில்‌ பணி செய்யும்‌ மோகனசுந்தரம்‌ என்பவர்‌ தடுத்து நிறுத்தி அதன்‌ ஓட்டுனரிடம்‌ சம்பவம்‌ குறித்து கேள்வி கேட்டுள்ளார்‌.

அங்கு பணியில்‌ இருந்த போக்குவரத்து காவலர்‌ 2846 சதீஸ்‌ மேற்படி மோகனசுந்தரத்திடம்‌ சென்று “இதனை விசாரிக்க நாங்கள்‌ இருக்கிறோம்‌ நீ யார்‌” என்று கேட்டு அவரை கைகளால்‌ தாக்கியதாக வாட்ஸ்‌அப்‌ குழுவில்‌ வீடியோ வந்துள்ளது.

இது தொடர்பாக மோகனகந்தரம்‌ இன்று 04.06.2022ம்‌ தேதி கொடுத்த புகாரின்‌ பேரில்‌ E2 பீளமேடு

காவல்‌ நிலையத்தில்‌ வழக்கு பதிவு செய்யப்பட்டூள்ளது. மேற்படி போக்குவரத்து காவலர்‌ சதீஸ்‌ கைது செய்யப்பட்டு, தற்காலிக பணிமிடை நீக்கம்‌ செய்யப்பட்டுள்ளார்‌.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.



Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube