கோமாளி ஸ்ருதிகா மற்றும் வித்யுலேகாவுடன் குக்கு பாத்தலா பாடலுக்கான பயிற்சி – தமிழ் செய்திகள்


உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ படத்தில் இடம்பெற்ற ‘பத்தல பத்தல’ என்ற பாடலுக்கு ‘குக் விட் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களான ஸ்ருதிகா மற்றும் வித்யுலேகா செய்த செயல் குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

vidyu040622 1

கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ‘பத்தல பத்தல’ பாடல் மிகப் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. கமல்ஹாசன் எழுதி பாடிய இந்த பாடலை அனிருத்தும் இணைந்து பாடியுள்ளார். இந்த பாடலின் போது திரையரங்குகளில் ரசிகர்கள் எழுந்து ஆடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

sruika040622 1

இந்த நிலையில் இந்த பாடலுக்கேற்ப குக் வித் கோமாளி போட்டியாளர்களான ஸ்ருதிகா மற்றும் வித்யூலேகா ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த பாடலின் தாளத்திற்கு ஏற்ப இருவரும் உடற்பயிற்சி செய்யும் போது இந்த வீடியோவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.





Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube