யுபிஎஸ்சி ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வு (II) முடிவுகள் வெளியானது – News18 Tamil


2021 ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வில் (II) தேர்ச்சி பெற்றவர்களின் இறுதி விண்ணப்பதாரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் http://www.upsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

முன்னதாக, 2021 ஆண்டுக்கான முப்படைகளின் அதிகாரிகள் பதவிக்கான ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைக்கான (CDS -II) ஆட்சேர்ப்பு அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது. 2022, ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி நடந்த முதல்நிலைத் தேர்வு முடிவுகள் அடிப்படையிலும், பாதுகாப்பு அமைச்சகத்தின் சேவைகள் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் இறுதிப் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி மையம் , கேரள மாநிலம் எழிமலாவில் உள்ள இந்திய கடற்படை பயிற்சி மையம், ஐதராபாதில் உள்ள விமானப்படை பயிற்சி மையம் (பறக்கும் பயிற்சிக்கு முந்தைய பயிற்சி), சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மையம் (ஆண்களுக்கான 117-வது குறுகிய கால ஆணைய பயிற்சி), சென்னையில் 31-வது குறுகிய காலம் கால ஆணைய (தொழில்நுட்பம் சாராத) (பெண்களுக்கான) பயிற்சிகளில் சேர்வதற்கு இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

விண்ணப்பதாரர்கள் பிறந்த தேதி மற்றும் கல்வித்தகுதி ராணுவ தலைமையகத்தால் உறுதி செய்யப்படும்.

மேலும் தகவல்களுக்கு, யுபிஎஸ்சி ‘சி’ நுழைவு வாயில் அருகேயுள்ள உதவி மையத்தை நேரடியாகவும், 011-23385271, 011-
23381125 மற்றும் 011-23098543 என்ற தொலைபேசி எண்களிலும், வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

joinindianarmy.nic.in, joinindiannavy.gov.in, www.careerindianairforce.cdac.in ஆகிய இணையதளங்களின் மூலமும் கூடுதல் விபரங்களைப் பெறலாம்.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube