அமெரிக்க தூதரகம் – News18 Tamil


அமெரிக்காவிற்கு நுழைய அனுமதி நாடுகிற (Non_Immigrant Visa) இந்திய மாணவர்களின் விசா செயல்முறையை மேம்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக  இந்தியாவுக்கான  அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, அமெரிக்க தூதரகம் அதன் ஆறாவது ஆண்டு மாணவர் விசா தினத்தை கொண்டாடியது. அமெரிக்க தூதரகத்தின் தூதர் (Charge D’Affaires)  Patricia Lacina கூறுகையில்,” மாணவர்களுக்கு  பலனளிக்கும் வகையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அதில் ஒன்று தான், நேர்காணல் தள்ளுபடி. இந்த திட்டத்தின் கீழ் , குடியேற்ற விசா விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வின் கீழ் நேர்காணல் இல்லாமல் (நேர்காணல் தள்ளுபடி) விசாக்களை புதுப்பிக்க அனுமதியளிக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.

கொரோனா தொற்றுக்கு முந்தைய காலத்தில், ஆண்டுக்கு 12 லட்சம் இந்திய மாணவர்கள் அமெரிக்காவிற்கு  குடியேறி வந்தனர். கொரோனா பொது முடக்கத்தால், இதன் எண்ணிக்கை கடுமையாக சரிந்ததது. இதனையடுத்து,  சில குறிப்பிட்ட விசா விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் தள்ளுபடி செய்யும் திட்டத்தை அமெரிக்க அரசு அறிவித்தது. அதன் கீழ்,  விண்ணப்பதாரர்கள் தூதரக பிரிவிற்கு நேரடியாக செல்லாமல், விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து தங்கள் விசாவினை புதுப்பித்துக் கொள்ள முடியும். முதல் முறை விண்ணப்பதாரர்களுக்கு இது பொருந்தாது.

இந்த கல்வியாண்டில், 8 லட்சம் இந்திய மாணவர்களுக்கு விசா வழங்க நிர்ணயிக்கப்பட்டதாக அமெரிக்கத் தூதரகத் துறை அமைச்சர் முன்னதாக தெரிவித்திருந்தார். இந்த, கோடை காலத்தில் மட்டும் 62,000க்கும்  மேற்பட்ட மாணவர்களுக்கு குடியேற்ற விசா வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி, மும்பையில் உள்ள அமெரிக்க தூதரகத்திலும், சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய தூதரகப் பிரிவிலும்  நாளொன்றுக்கு 3000க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேர்காணலில் தோன்றி வருவதாக தூதரக அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, தொழில்சார் விசாக்கான விதிமுறைகளை கனடாவின் கியூபெக் (Quebec) மாகாண அரசு கடுமையாக்கியுள்ளது. வரும் செப்டமபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த புதிய விதிமுறையின் கீழ், ” கியூபெக் (Quebec) மாகாணத்தில் செயல்படும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பயின்ற மாணவர்கள் மட்டுமே படிப்புக்கப் பிந்தைய தொழிற்சார் விசாவினை  (Post Graduation Work Permit) பெற முடியும்.

தன்னாட்சி பெற்ற நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் பணிக்கான விசா பெற தகுதி பெற முடியாது. கனடா நாட்டில் நிரந்தர குடியேற்றம் பெறுவதற்கு பணி விசா முக்கியமானது என்பதால், தற்போது தனியார் நிறுவனங்களில் படித்து வரும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிப்படைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube