நயன்தாரா: திருப்பதிக்கு காலணியுடன் சென்ற விவகாரம்: மன்னிப்பு கேட்ட விக்கி – நயன் தம்பதியினர்.! – மன்னிப்பு கேட்கும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஜோடி


கோலிவுட் வட்டாரத்தில் நட்சத்திர காதல் ஜோடிகளாக நயன் – விக்கி இருவரும் வலம் வந்தனர். ரசிகர்கள் கூட கோடம்பாக்கத்தினரும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரின் திருமணத்தையும் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர். இந்நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமணம் நேற்றைய தினம் பிரம்மாண்டமாக மகாபலிபுரத்தில் நடைபெற்றது.

திருமணம் முடிந்த கையோடுநயன்தாரா, தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் நேற்று திருமலை திருப்பதி ஆலயத்திற்கு சுவாமி தரிசனத்திற்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் திருப்பதியில் நடைபெறும் கல்யாண உற்சவ சேவையில் பங்கேற்றுள்ளனர். அங்கு புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. ஆனால் நயன்தாரா, விக்னேஷ் சிவனுடன் செருப்பு அணிந்த காலுடன் புகைப்படம் எடுத்துள்ளதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.

உண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இது தொடர்பாக விக்னேஷ் சிவன், நயன்தாரா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. விக்னேஷ் சிவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எங்கள் திருமணம் திருப்பதியில் நடக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அது சாத்தியமில்லாததால் சென்னையில் எங்கள் திருமணத்தை நடத்த வேண்டியிருந்தது.

எங்கள் திருமணத்தை முடித்த கையோடு வீட்டிற்கு செல்லாமல் சாமி கல்யாணத்தைப் பார்க்கவும், நாங்கள் மிகுந்த பக்தி கொண்ட பாலாஜியின் ஆசீர்வாதத்தைப் பெறவும் நேரடியாக திருப்பதிக்குச் சென்றோம். அங்கு நாங்கள் அற்புதமான தரிசனம் செய்தோம். இந்த நாளில் எங்கள் நியாபகமாக இருக்க வேண்டும் என்பதற்காக கோயிலுக்கு வெளியே ஒரு புகைப்படம் எடுத்து அதை எங்கள் விருப்பப்படி இங்கே திருமணம் முடிந்துவிட்டது என்று உணர்வை பெற விரும்பினோம். ஆனால் கூட்டம் மற்றும் குழப்பம் காரணமாக நாங்கள் வளாகத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.

விக்ரம்: ‘விக்ரம்’ படம் கண்டிப்பா இதை செய்யுங்கள்.. அடித்து சொல்லும் பிரபலம்..!

பின்னர் சலசலப்பு குறைந்த நேரத்தில் உள்ளே நுழைந்து படம் எடுக்கும் அவசரத்தில், நாங்கள் எங்கள் காலணிகளை அணிந்திருந்ததை உணரவில்லை. நாங்கள் தொடர்ந்து கோவில்களுக்குச் செல்லும் தம்பதிகள், கடவுள் மீது அபரிமித நம்பிக்கை கொண்டவர்கள். கடந்த 30 நாட்களில் கிட்டத்தட்ட 5 முறை திருமலைக்குச் சென்று திருமணத்தை அங்கே நடத்த முயற்சித்தோம். எங்களால் புண்படுத்தப்பட்டவர்களிடம் நாங்கள் உண்மையாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் நாங்கள் நேசிக்கும் இறைவனுக்கு எந்த அவமரியாதையும் இல்லை. எங்கள் சிறப்பு நாளுக்காக அனைவரிடமிருந்தும் நாங்கள் பெற்ற அன்பு மற்றும் வாழ்த்துக்களுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். மேலும் உங்களிடமிருந்து எங்களுக்குத் தேவையான அன்பையும், வாழ்வையும் மட்டுமே நீங்கள் தொடர்ந்து வழங்குவீர்கள் என்று நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube