மாவட்ட அளவிலான வள பயிற்றுநர் பணி… நாள் ஒன்றுக்கு ரூ.2000/- சம்பளம் – விண்ணப்பிக்க விவரங்களைக் காண்க


சமுதாய திறன் பள்ளி மற்றும் சமுதாய பண்ணை பள்ளிகளை வலுப்படுத்தும் விதமாக வேளாண்மை கால்நடை மற்றும் பண்ணை சாரா தொழில்களுக்கு மாவட்ட அளவிலான வள பயிற்றுநர் (மாவட்ட வள நபர்) நியமிக்கப்படவுள்ளனர்.

தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டமானது (தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம்) உலக வங்கிநிதி உதவியுடன் செயல்படும் அரசு திட்டம். இத்திட்டம் திருப்பூர் மாவட்டத்தில்
திருப்பூர் அவிநாசி உடுமலைபேட்டை குண்டடம் மற்றும் பொங்கலூர் ஆகிய ஐந்து வட்டாரங்களில் செயல்பட்டு வருகிறது. இவ்வட்டாரங்களில் அமைக்கப்படும் சமுதாய திறன் பள்ளி மற்றும் சமுதாய பள்ளிகளை வலுப்படுத்தும் விதமாக வேளாண்மை கால்நடை மற்றும் பண்ணை சாரா தொழில்களுக்கு மாவட்ட அளவிலான வள
பயிற்றுநர் (மாவட்ட வளவாளர்) நியமிக்கப்படவுள்ளனர்.

மாவட்ட வள பயிற்றுநர் பணியிடத்திற்கு வேளாண்மை தோட்டக்கலை கால்நடை பராமரிப்பு மீன் வளம் அல்லது தொடர்புடைய துறையில் இளங்கலை பட்டம்
முதுகலைப்பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். தொடர்புடைய துறையில் 10 வருடங்கள் முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். தொடர்புடைய மாவட்டத்தைச் சேர்ந்தவராக அல்லது
அம்மாவட்டத்தில் குடியேறியவராக இருத்தல் வேண்டும். மதிப்பு சங்கிலி ஒருங்கிணைத்தல் மற்றும் வேளாண் பொருட்களை மேம்படுத்துவதில் போதிய அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு பயிற்சி அளிப்பதில் ஆர்வமுள்ளவராக இருத்தல் வேண்டும். சர்வதேச நிறுவனங்கள் , அரசு நிறுவனங்கள் சிவில் சொசைட்டிகளில்
பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நபருக்கு ஒரு நாளுக்கு மதிப்பூதியமாக ரூ.2000/- மற்றும் உள்ளூர் போக்குவரத்துக்காக ரூ.250/- வழங்கப்படும். மாவட்ட வள பயிற்றுநருக்கான பணி ஒரு
மாதத்தில் 20 நாட்களுக்கு மிகாமல் வழங்கப்படும்.

மேற்படி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் ( https://bit.ly/38zmZPo ) 10.06.2022 அன்று மாலை 5.00 மணிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கீழ்கண்ட
முகவரிக்கு அனுப்பலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.எஸ்.வினீத் தெரிவித்துள்ளார்.

மின்னஞ்சல் முகவரி : tur.tnrtp@yahoo.com

அலுவலக எண் : 0421-2999723

மாவட்ட செயல் அலுவலர்,
வாழ்ந்துகாட்டுவோம் திட்டம் , ஓப்
(தமிழ்நாடு ஊரகப் புத்தாக்க திட்டம்) ;
மாவட்ட திட்ட மேலாண்மை அலகு,
# 713 & 714, மாவட்ட ஆட்சியரக 7-வது தளம் ,
திருப்பூர் மாவட்டம்.
தொலைபேசி எண்: 0421-2999723.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube