vigensh shivan nayanthara wedding ceremony today : நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம்.. பாதுகாப்பு பணியில் பவுன்சர்கள்!


நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் இன்று சற்று நேரத்தில் மாமல்லபுரம் அருகில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தொடங்கியுள்ளது. திருமணம் நடைபெறும் கடற்கரை விடுதியின் முன்புறம், கடற்கரைப் பகுதி என அனைத்து இடங்களிலும் பவுன்சர்கள் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமண விழாவிற்கு பாதுகாப்பு வழங்குவதற்காக தனியார் காவலர்களான பவுன்சர்கள் 80க்கும் மேற்பட்டவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர் .

மண்டபத்திற்கு உள்ளே மட்டுமின்றி , மண்டபத்திற்கு பின்புறம் கடற்கரை வழியாக யாரும் உள்ளே நுழைய கூடாது என்பதற்காகவும், புகைப்படம் எடுத்துவிட கூடாது என்பதற்காகவும் அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் .மேலும் உள்ளேயும் விருந்தினர்கள் யாரும் புகைப்படம் எடுக்காமல் இருப்பதற்காக பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நயன்தாரா : நிஜத்தில் விக்னேஷ்.. ஆன் ஸ்கிரீனில் நயனின் பெஸ்ட் ஜோடி யார் தெரியுமா?

நயன் – விக்கி திருமணத்தை தனியார் ஓடிடி சேனல் நேரடியாக ஒளிப்பரப்புகிறது. அதனால் தான் விருந்தினர்களுக்கு இவ்வளவு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லை திருமண புகைப்படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் அதற்கு முன்பு புகைப்படங்கள் ஆன்லைனில் லீக் ஆக கூடாது என்பதிலும் நயன் – விக்கி உறுதியாக இருக்கிறார்கள். கல்யாணத்தில் எல்லா விஷயத்தையும் பார்த்து வித்தியாசமான ஏற்பாடுகளை செய்தார் இந்த காதல் ஜோடி. தண்ணீர் பாட்டலில் தொடங்கி செட் , சாப்பாடு என பிரம்மாண்டத்தின் உச்சமாக இன்று விக்கி – நயன் திருமணம் நடைபெறவுள்ளது.

@ Google செய்திகளைப் பின்தொடரவும்: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.



Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube