Vignesh Shivan:விக்னேஷ் சிவனை திட்டிய நயன்தாரா ரசிகர்கள்: காரணம் தி… – when nayanthara fans slammed vignesh shivan for this reason


நானும் ரௌடி தான் படத்தில் நடித்த போதில் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார் நயன்தாரா. காதலை வீட்டில் சொல்லி பெரியவர்களின் ஆசியுடன் நாளை திருமணம் செய்துகொள்கிறார்கள்.

திருமணம் அவர்களின் மகாபலிபுரத்தில் இருக்கும் ரிசார்ட் ஒன்றில் நடக்கிறது. திருமணத்திற்கு திரையுலகைச் சேர்ந்த சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் விக்னேஷ் சிவன் வாங்கிய திட்டு பற்றி பேசப்படுகிறது. நயன்தாராவுடன் சேர்ந்து அடிக்கடி வெளிநாட்டிற்கு சென்று வந்தார் விக்னேஷ் சிவன்.

அப்போது எல்லாம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். மேலும் சில நேரங்களில் நயன்தாராவுடன் செல்ஃபி எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.

அப்படி அவர் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகும் போது எல்லாம், இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. தலைவியை கல்யாணம் பண்ற ஐடியாவே இல்லையா?. இப்படியே கடைசி வரை இருந்துவிடலாம் என நினைப்பா என நயன்தாரா ரசிகர்கள் ஒரு பக்கம் விக்னேஷ் சிவனை திட்டி வருகிறார்கள்.

மறுபக்கமோ 90ஸ் கிட்ஸுகள் திட்டினார்கள். யோவ், நாங்களே ஒரு பொண்ணு கிடைக்காமல் அல்லாடிக் கொண்டிருக்கிறோம். நீங்க வேற, சும்மா சும்மா என் தங்கத்தை பாரு, கண்மணியை பாருனு வீடியோ, புகைப்படங்கள் போட்டு வெறுப்பேத்தாதீங்க. எங்க வயித்தெரிச்சல் எல்லாம் உங்களை சும்மா விடாது என்று திட்டினார்கள்.

நயன்தாரா:நயன்தாராவுக்கு சிம்பு, பிரபுதேவா கொடுக்கும் திருமண பரிசு…



Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube