Vijay next movie with lokesh kanagaraj the director confirmed


வெற்றிக் கூட்டணியான நடிகர் விஜய் – இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீண்டும் இணையவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பீஸ்ட் திரைப்படம், வெளிவந்த பின்னர் ரசிகர்களுக்கு அதிருப்தியை அளித்தது. இருப்பினும் விஜய் என்கிற ஒற்றை நபர் காரணமாக படம் வர்த்தக ரீதியில் வெற்றியை பெற்றது.

இதனால் மீண்டும் மாஸ்ஸான விஜய்யை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது. பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் தற்போது தளபதி 66 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் விமர்சனம் மற்றும் வர்த்தக ரீதியில் மெகா ஹிட்டாகுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

இதையும் படிங்க – ‘ரஜினி படங்களில் பெண்களை தப்பா காட்டிருக்காங்க’ – ஆர்.ஜே. பாலாஜி பேச்சால் சர்ச்சை

இந்த படத்தில் விஜய்யுடன் சரத் குமார், ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ், யோகிபாபு உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ம் தேதியையொட்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி 66 படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜுடன் விஜய் இணைவதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் அதனை லோகேஷ் உறுதி செய்துள்ளார்.

இதையும் படிங்க – விக்ரம் படத்தில் சூர்யா கேரக்டரை விவரித்த கமல்… பார்ட் 3 உருவாகுமா?

சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற லோகேஷ் விஜய்யுடன் அடுத்த படம் பண்ணுவதாக தெரிவித்தார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விக்ரம் படம் வெளியான பின்னர் அறிவிக்கப்படும் என்ற அப்டேட்டையும் கொடுத்தார் லோகேஷ்.

ஏற்கனவே இருவர் கூட்டணியில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களை திருப்தி செய்ததுடன் வசூலிலும் சாதனை படைத்தது.

கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படம் அடுத்த மாதம் 3ம் தேதி திரைக்கு வருகிறது.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.



Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube