உண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
காவல்துறை அதிகாரியாக விஜய் சேதுபதி நடித்துள்ள ‘டிஎஸ்பி’ படம் நேற்றைய தினம் வெளியானது. இந்தப்படத்தில் அனுகீர்த்தி, குக் வித் கோமாளி புகழ், சாந்தினி, பிக்பாஸ் பிரபலம் ஷிவானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் நடிகர் விமலும் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். நேற்றைய தினம் வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
‘ஜெயிலர்’ படப்பிடிப்பை விட்டுட்டு நெல்சன் எங்க போய் இருக்காரு தெரியுமா.?: வைரலாகும் புகைப்படம்.!
இந்நிலையில் சிவகார்த்திகேயன் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்க தயார் என தெரிவித்துள்ளார். அவருடைய பிரெண்ட் கதாபாத்திரத்திலும் நடிக்க ரெடியாக இருப்பதாக கூறியுள்ளார். மேலும் தங்களுக்கிடையில் இருப்பது ஆரோக்கியமான போட்டி தான் என்றும் நாங்கள் போட்டி நடிகர்கள் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். அவரின் இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Vijay Deverakonda: பிரபலம் என்பதால் சங்கடம்: வேதனையில் விஜய்..!
விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இருவருக்கும் இடையே போட்டி இருப்பதாக ரசிகர்கள் மத்தியில் விஜய் சேதுபதி கூறியுள்ளார். அப்போது விரைவில் இருவரையும் திரையில் பார்க்கலாம் என ரசிகர்கள் ஆர்வமுடன் கமெண்ட் அடித்து வருகின்றனர். சிவகார்த்திகேயன் தற்போது ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.