சமூக வலைதளங்களில் வைரலான விக்ரம் நடிகை கமல் ஹாசன் லோகேஷ் – தமிழ் செய்திகள்


உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்தப் படத்தை மீண்டும் பார்த்தாலும் ஒவ்வொரு முறையும் பார்க்கும் போது புதுப்புது அனுபவங்கள் ஏற்படுவதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்த படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகிய மூவரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருந்தாலும் இந்த படத்தில் ஒருசில காட்சியில் நடித்தவர்கள் கூட படம் முடிந்து வெளியே வரும்போது மனதில் ஆழமாக பதிந்துள்ளதே படத்தின் மிகப்பெரிய வெற்றியை எடுத்து கொள்ளலாம்.

maya krishnan11062022m1

அந்த வகையில் ‘விக்ரம்’ படத்தில் ஒரே ஒரு காட்சியில் நடித்தவர் நடிகை மாயா கிருஷ்ணன். மதுரை பெண்ணான இவர் பகத் பாசில் மற்றும் கமல்ஹாசனுடன் ஒரே ஒரு காட்சியில் மட்டுமே நடித்திருந்தார். ஆனால் அந்த காட்சிக்கு மிகப்பெரிய அளவில் மக்களின் வரவேற்பு கிடைத்த நிலையில் அவர் சமூக வலைதளங்களில் பிரபலம் அடையும் அளவுக்கு மாறிவிட்டார்.

ஏற்கனவே நடிகை மாயா கிருஷ்ணன் தனுஷின் ‘தொடரி’, சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தாலும் ‘விக்ரம்’ படத்தில் நடித்த ஒரு காட்சி தான் அவரை எங்கேயோ கொண்டு சென்றது குறிப்பிடத்தக்கது.

maya krishnan11062022m2

மேலும் அவர் ‘சர்வர் சுந்தரம்’ ‘துருவ நட்சத்திரம்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் இந்த படங்கள் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube