விஜய் சேதுபதி கேரக்டர் பற்றி விக்ரம் கட்டிங் பிளேயர் கூறுகிறார் – தமிழ் செய்திகள்


உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது என்பதும் இந்தப் படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத்பாசில் மட்டுமின்றி சின்ன சின்ன கேரக்டரில் நடித்தவர்கள் கூட மனதில் தங்கும் அளவுக்கு லோகேஷ் கனகராஜ் கேரக்டர்கள் உருவாகி இருப்பது தான் இந்த படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது.

குறிப்பாக விஜய் சேதுபதியின் வலது பக்கம் வரும் ஜாபர் சாதிக் என்பவர் தனது எதிராளிகளை திடீரென காலில் கட்டிங் பிளேடு வைத்து கட் செய்து அவர்களை கொல்லுவார். கடைசியில் கமல்ஹாசனையும் கொல்ல முயற்சிக்கும் போதுதான் ஒரு திருப்பம் ஏற்படும் என்பது படம் பார்த்தவர்கள் அறிந்ததே.

jaffer sadiq08062022m

இந்த நிலையில் ஜாபர் சாதிக் கொடுத்த பேட்டியில் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக பிரபுதேவா மற்றும் ராகவா லாரன்ஸ் ஆகிய இருவரில் ஒருவர் சமீபத்தில் ‘சந்தானம்’ கேரக்டரில் நடித்ததாகவும், ஆனால் அவர்கள் இருவரும் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்ட பிறகுதான் இந்த படத்தில் விஜய் சேதுபதி வந்ததாகவும் கூறியுள்ளார்.

jaffer sadiq08062022m3

இந்த தகவல் அனைவருக்கும் ஆச்சரியமாக இருக்கும் நிலையில் விஜய் சேதுபதியின் சந்தானம் கேரக்டரில் பிரபுதேவா அல்லது ராகவா லாரன்ஸ் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பதை யூகித்து கமெண்ட் பகுதியில் பதிவு செய்யுங்கள்.





Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube